Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
சென்னை

காவல்துறை மக்களின் நண்பன் ! நிரூபித்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் !!?

by ஆசிரியர் July 10, 2026
written by ஆசிரியர் July 10, 2026 0 comments
10
Reading Mode

காவல்துறை மக்களின் நண்பன் ! நிரூபித்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் !!?

சென்னை அம்பத்தூர் பி.எஸ்.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் கீழ் சிலர் வீடுகள் இல்லாமல் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

வறுமையின் கோரப் பிடியில் வீடில்லாமல் பாலத்தின் கீழ் வசிக்கும் இவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் தொழிற்சாலைகளில் வீணாக வெளியே போடப்படும் துண்டு துண்டு இரும்புகளைச் சேகரித்து அவற்றை கடைகளில் விற்று அதன் மூலம் வாழ்பவர்கள்.

இவர்களின் இத்தகைய கொடிய வறுமையில் இவர்களுடைய பிள்ளைகளை வளர்ப்பது என்பதே கடினாமான காரியமாக இருக்கும்போது அவர்களை பள்ளிக்கூடம் அனுப்புவது என்பது கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.

அவர்களுடைய பிள்ளைகளும் சாலைகளில் விளையாடிக்கொண்டும், அவர்களுடன் சேர்ந்து இரும்பு மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய வீணான பொருள்களை சேகரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

இங்கு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் கடந்து போகிறார்கள். யாரும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை.ஆனால், காவல்துறை கரம் கொடுக்க முன்வந்தது.

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தின் ஆய்வாளராக உள்ள விஜயராகவன், அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் ரோந்து செல்லும்போது அங்கே பி.எஸ்.என்.எல். எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் கீழ் வசிக்கும் பாதையோரவாசிகளின் பிள்ளைகள் சாலைகளில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, அவரின் காக்கி மனதுக்குள் இரக்கம் ஏற்பட்டுள்ளது.

படிக்க வேண்டிய வயதில் இப்படி எந்த ஆதரவும் இல்லாமல் கல்வியும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருந்தால் இந்த குழந்தைகள் வருங்காலத்தில் குற்றச் செயல்களை நோக்கியல்லவா செல்வார்கள். அந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்த இன்ஸ்பெக்டர் விஜயராகவன் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த குழந்தைகளை அழைத்து விசாரித்தபோது அவர்களில் மூன்று பேர் வறுமையால் பள்ளிக்கூடத்தை விட்டு நின்றுவிட்டது தெரியவந்தது.

அதே போல பள்ளிக்கூடம் போகிற வயதில் அவர்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரித்து மொத்தம் 10 பேரை கண்டறிந்தார்.

இந்த குழந்தைகள்… பள்ளிக்கூடம் போக வேண்டுமானால்… அவர்களுக்கு சீருடை… பள்ளி புத்தக பை… பாடநூல் உபகரணங்கள்… எல்லாம் தேவை என்பதை அறிந்தார்.

அந்த சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரித்தால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களின் பண உதவியோடு 6 சிறுமிகள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 மாணவர்களுக்கு சீருடை, காலணி, பேஸ்ட், பிரஷ், புத்தகப் பை, பாடநூல் உபகரணங்கள் என வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த சிறுவர்களை அருகே உள்ள பட்டரவாக்கம் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துள்ளார்.

ஏதோ பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டோம் என்று விட்டுவிடாமல் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பதற்காக அந்த பிள்ளைகளை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் தினமும் தங்கள் ரோந்து வாகனத்தில் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால், பாதையோர வாசிகளின் பிள்ளைகள் தினமும் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள்.

”அந்த பிள்ளைகளை அவர்கள் தீய வழிகளில் செல்லாமல் தடுத்து பள்ளிக்கூடம் அனுப்புகிறோம் என்பது ஒரு சின்ன சந்தோஷம்” என்கிறார் அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்.

காவல்துறை மக்களின் நண்பன் என்பார்கள். அதை வெறும் வார்த்தையாக அல்லாமல், நிஜமாக்கிக் காட்டியிருக்கிற அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்களை நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Customize Text: Font Color:
police help
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
காக்கியின் கம்பீரம் ! விஜயகுமார் ஐபிஎஸ் நினைவஞ்சலி !!
next post
திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

You may also like

வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று...

September 21, 2026

எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி...

September 21, 2026

ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும்...

September 21, 2026

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற...

September 17, 2026

ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள்...

September 15, 2026

உயர் நீதிமன்றம் அதிரடி ! காவல் நிலைய சிசிடிவி பதிவுகள்...

September 7, 2026

தொழில் அதிபர் வீரமணி போக்சோ வழக்கு ! அருண் ஐபிஎஸ்...

September 1, 2026

தவெக விஜய் அரசின் நிர்வாக அதிரடி ! தமிழக காவல்துறையில்...

September 1, 2026

அருண் ஐபிஎஸ் – சவுக்கு சங்கர் மீது ரூபாய் 01...

August 21, 2026

லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி...

August 20, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision