விழுப்புரம் விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!? by ஆசிரியர் August 8, 2026 written by ஆசிரியர் August 8, 2026 0 comments 1 Reading Mode விழுப்புரம் காவல்துறைபோதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!? போதை இல்லா தமிழகத்தையும், போதை இல்லா விழுப்புரம் மாவட்டத்தையும் உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக கடந்த ஏழு நாட்களாக போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் ஓவிய போட்டிகள், பேரணிகள் நடத்தப்பட்டது. 08.08.2026 காலை 7:00 மணி முதல் 09.30 மணி வரை விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய நகராட்சி பூங்காவில் “போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்”“போதையில்லா விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!? next post தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் , தொழில் நுட்பத்தின் புதிய முயற்சி தொடக்கம்! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.