Perumbalur தேர்தல் காலத்தில் சிறப்பாக பணி செய்த காவல்துறையினருக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களுடன் விருந்தளிப்பு!? by ஆசிரியர் May 13, 2026 written by ஆசிரியர் May 13, 2026 0 comments 7 Reading Mode தேர்தல் காலத்தில் சிறப்பாக பணி செய்த காவல்துறையினருக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளுடன் விருந்து அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை சிறப்பாகவும், எந்தவித குறையும் இல்லாமல் வெற்றிகரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர். இகாப அவர்கள் சிறப்பு சிறப்பு செய்து பாராட்டுகளுடன் கூடிய விருந்தை ஏற்பாடு செய்தார். தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணுதல், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினர் ஆற்றிய பணி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று தந்துள்ளது. இதைப் போன்று காவல் துறையினரின் சீரிய பணி, மென்மேலும் சிறக்க போலீஸ் விஷன் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது. இந்த நிலையில், காவல்துறையினரின் tireless சேவையை பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த விருந்தில், பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். மேலும், “காவலர்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பான சேவையாலேயே தேர்தல் பணிகள் வெற்றிகரமாக நிறைவேறியது” எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு காவல்துறையினருக்கு உற்சாகத்தையும், பணிப்பற்றையும் மென்மேலும் அதிகரித்ததாக அமைந்தது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 20/ IPS. k. prabhakar Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஆதாய கொலை வழக்கு! 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!! காவல் அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு!!!? next post க்யூ பிரிவு போலீசார் அதிரடி !?இலங்கைக்கு கடத்த முயன்ற ₹ 5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல் !? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.