இந்தியா இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்” பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி !!? by ஆசிரியர் November 2, 2026 written by ஆசிரியர் November 2, 2026 0 comments 4 Reading Mode இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்” பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி !!? இந்திய ராணுவ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஒரு சாதனை! மேஜர் தீக்ஷா சி.முடா தேவண்ணவர் என்ற இந்திய ராணுவ பெண் அதிகாரி, தனது அசைக்க முடியாத மன உறுதி, கடின உழைப்பு மற்றும் தன்னம் பிக்கையால் ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்திய தரைப்படையின் மிகவும் கடினமான மற்றும் சிறப்பு வாய்ந்த பிரிவுகளில் ஒன்றான பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸ் (Para Special Forces) பிரிவின் பெருமைமிக்க அடையாளமான ‘பலிதான் பேட்ஜ்’ (Balidan Badge) பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை மேஜர் தீக்ஷா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றும் மேஜர் தீக்ஷா, மருத்துவப் பணியில் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல், ராணுவத்தின் மிகக் கடினமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்ள துணிந்து களமிறங்கியுள்ளார். “பலிதான் பேட்ஜ்” என்பது சாதாரண ராணுவ அடையாளம் அல்ல … !!! சிறகுகளுடன் கூடிய கத்தியின் வடிவில் அமைந்துள்ள இந்த பேட்ஜ், வீரம், தியாகம், கடமை மற்றும் நாட்டிற்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் மனநிலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பெருமையைப் பெறுவதற்கான பயிற்சி மிகவும் கடுமையானது. சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும் தீவிரமான உடல் மற்றும் மனப் பரிசோதனைகள், கடுமையான பயிற்சிகள், சகிப்புத்தன்மை சோதனைகள் மற்றும் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் என பல்வேறு சவால்களை வீரர்கள் கடக்க வேண்டியிருக்கும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களில் பலர் கடுமையான சவால்களைத் தாங்க முடியாமல் பாதியிலேயே விலகுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால்… மேஜர் தீக்ஷா பின்வாங்கவில்லை.வலியைப் பார்த்து அஞ்சவில்லை.சவால்களைப் பார்த்து தயங்கவில்லை.“என்னால் முடியும்” என்ற நம்பிக்கையுடன் முன்னேறினார். அதன் விளைவாகவே இன்று இந்திய ராணுவ வரலாற்றில் நினைவு கூறப்படும் ஒரு சாதனையை தனது பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார். பல ஆண்டுகளாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியதாக கருதப்பட்ட இந்த கடினமான ராணுவப் பாதையில், ஒரு பெண்ணாக அவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது, இந்தியாவின் பெண்களுக்கு மட்டுமல்ல… “வாய்ப்பு கிடைத்தால் பெண்களால் எதையும் சாதிக்க முடியும்” என்பதற்கான ஒரு வலிமையான எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது. தன்னுடைய உடல் மற்றும் மன வலிமையை நிரூபித்துள்ள மேஜர் தீக்ஷா, மிகவும் சவாலான சூழ்நிலை களிலும், பேரிடர் மற்றும் போர் போன்ற கடினமான களங்களிலும் பணியாற்றத் தயாராக இருப்பதற்கான திறனை வெளிப் படுத்தியுள்ளார். ஒரு கனவு… அதற்கான கடின உழைப்பு… தோல்வியைப் பொருட்படுத்தாத மன உறுதி… இறுதியில் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சாதனை! பெண்களால் முடியாது என்று சொல்லப்பட்ட பல எல்லைகளை, பெண்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய திறமையால் உடைத்துக் கொண்டிருக் கிறார்கள்.அந்த வரிசையில் மேஜர் தீக்ஷாவின் இந்த சாதனையும் நிச்சயம் ஒரு பெருமைக்குரிய தருணம். நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றும் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நமது தலை வணக்கம். அதிலும், மிகக் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து இந்த சாதனையை நோக்கி முன்னேறிய மேஜர் தீக்ஷா சி. முடாதேவண்ணவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! நாட்டிற்காக சேவை செய்வதைவிட உயர்ந்த பெருமை வேறு எதுவும் இல்லை.வீரப் பெண்மணிக்கு ஒரு சல்யூட்! தன் உயிரை துச்சமென நினைத்து நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து பணி செய்த வீரப் பெண்மணி மேஜர் தீக்ஷா அவர்களை போலீஸ் விஷன் வாயிலாக தலை வணங்கி, வாழ்த்துகிறோம்!! Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் You may also like காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!? October 28, 2026 கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர்... October 8, 2026 உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –... September 18, 2026 மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்... September 17, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.