இந்தியா கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடி சாதித்த செங்கல் சூளைத் தொழிலாளி !!? by ஆசிரியர் October 8, 2026 written by ஆசிரியர் October 8, 2026 0 comments 9 Reading Mode கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடி சாதித்த செங்கல் சூளைத் தொழிலாளி !!?கடுமையான பொருளாதார சூழலிலும் தனது முயற்சியையும் திறமையையும் வெளிப்படுத்தி, செங்கல் சூளையில் பணியாற்றும் பெண் ஒருவர் 1,600 மீட்டர் தூரத்தை வெறும் 6 நிமிடங்களில் ஓடி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதிகள் இல்லாத சூழலிலும் விடாமுயற்சியுடன் சாதித்த இந்த முயற்சி பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.காலில் செருப்புகூட இல்லாமல், சேலையைத் தூக்கிப் பிடித்தபடி அந்தத் தாய் ஓடினார்… தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக! படித்தாலே கண்கள் கலங்கும் கவிதாவின் போராட்டக் கதை!? உடுத்துவதற்கு நல்ல உடையோ, காலில் அணிவதற்கு ஒரு ஜோடி செருப்போ வாங்கக்கூட கையில் பணம் இல்லை. ஆனால், கொளுத்தும் வெயிலில், மணல் நிறைந்த மைதானத்தில் சேலையணிந்தபடியே அவர் ஓடியது தனது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையை நோக்கித்தான். ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், துல்மி பகுதியைச் சேர்ந்தவர் கவிதாதேவி. குஜராத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவரது கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தபோது, கவிதாவின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. இரண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் வயதான மாமியார், மாமனார் என குடும்பத்தின் முழுப் பொறுப்பும் அவரது தோள்களில் விழுந்தது. குடும்பத்தின் பசியைப் போக்குவதற்காக, பின்னர் செங்கல் சூளையில் கடுமையாக உழைக்கத் தொடங்கினார். ஆனால், விதியின் முன் தோற்றுப்போக கவிதா தயாராக இல்லை. அந்த நேரத்தில்தான் ஊர்க்காவல் படை (Home Guard) பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவது குறித்து அவருக்குத் தெரியவந்தது. வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தபோதிலும், கிடைத்த அந்த வாய்ப்பை அவர் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். முதல் கட்டத் தேர்வாக 1000 மீட்டர் ஓட்டம் இருந்தது. விளையாட்டு உடையோ, காலில் செருப்போ இல்லாமல், கொளுத்தும் வெயிலில், சேலையணிந்தபடியே காலில் எதுவும் அணியாமல் கவிதா ஓடினார்.10 நிமிடங்களில் முடிக்க வேண்டிய அந்த ஓட்டத்தை, வெறும் 6 நிமிடங்களில் முடித்து, தனது தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் நிரூபித்தார்! வாழ்க்கையின் சவால்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அவற்றுக்கு முன் தலைகுனிய மாட்டேன் என்று நிரூபித்த இந்தத் தாயின் போராட்டத்திற்கு ஆயிரம் சல்யூட்! கவிதாவுக்கு இந்த வேலை கிடைத்து, அவரது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், அந்தக் குடும்பத்திற்கு ஒரு நல்ல நாளை பிறக்கவும் போலீஸ் விஷன் மீடியா நெட்வொர்க் மனதார வாழ்த்துகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை – மெச்சத்தகுந்த பணி செய்த தனிப்படை போலீசார் – எஸ்பி அபிஷேக் குப்தா ஐபிஎஸ் பாராட்டு !!? next post இராமநாதபுரம் போக்சோ வழக்கு ! வழக்கறிஞர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு !! பாதிக்கப்பட்டவரை மிரட்டிய ஷேக் இப்ராகிம் !!!? You may also like காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!? October 28, 2026 உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –... September 18, 2026 மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்... September 17, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.