இந்தியா உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் – ஐபிஎஸ் !!? by ஆசிரியர் September 18, 2026 written by ஆசிரியர் September 18, 2026 0 comments 22 Reading Mode உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஒருவர் ஐஏஎஸ் – மற்றொருவர்ஐபிஎஸ் !!? உத்தரப்பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பி கலெக்டர் மற்றும் எஸ்.பி. இந்த மாதிரி பதவியில் இருப்பதே ஒரு மாஸ்தான், அதிலும் ஒரு குடும்பத்தில் இரண்டு அதிரடி நாயகர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி மாவட்ட ஆட்சியராகவும், அதிரடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே. இதில் மூத்தவர் அஜய்பால் சர்மா டாக்டருக்கு படித்தவர் பல் மருத்துவர். இளையவர் அமித்பால் சர்மா எம்.பி.பி.எஸ் படித்த பொது மருத்துவர். இவர்கள் தங்களது புரஃபசன்களை விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இருவரும் பஞ்சாப் லுதியானாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இவரது தந்தை ஆசிரியர். இதில் இளையவர் அமித்பால் சர்மா யுபிஎஸ்சி தேர்வில் 139வது ஆல் இந்தியா ரேங்க் பெற்று ஐபிஎஸ் – க்கு தேர்வானார், ஆனால் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார். ஆனால் இதற்கு முன்பே தேர்வெழுதி வெற்றி பெற்ற மூத்தவர் அஜய்பால் சர்மா ஐ.பி.எஸ் ஆகவே பணியாற்றினார். அஜய்பால் சர்மா பல்வேறு மாவட்டங்களில் எஸ்.எஸ்.பி மற்றும் எஸ்,பியாக பெயர் பெற்றவர். 2011இல் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வரும் இவர் மொத்தம் 139 என்கவுண்டர் களில் மூளையாக செயல்பட்டுள்ளார் இவருக்கு ஊடகங்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் மற்றும் சிங்கம் என பெயர் சூட்டியுள்ளன. இளையவரான கலெக்டர் அமித்பால் சர்மா கடந்த 2025 கும்பமேளாவில் அனைத்து கூட்டங்களையும் சரி செய்து கும்பமேளாவை சிறப்பாக நடத்திய கலெக்டர் எனவும் சிறந்த நிர்வாகத்திறன் உள்ள கலெக்டர் எனவும் அறியப்படுகிறார். கலெக்டர் கும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியின் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அண்ணன் அருகே உள்ள மாவட்டமான கவுசாம்பி மாவட்ட காவல் அதிகாரியாகவும் பணிபுரிவதால் அருகருகே அண்ணன் தம்பி அதிரடி அதிகாரிகள் பணிபுரிகிறார்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் ! எஸ்பி அன்ஷூல் நாகர் ஐ.பி.எஸ் திடீர் ஆய்வு !!? next post குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா கும்பலுக்கு கொண்டாட்டம் !!? You may also like மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்... September 17, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.