இந்தியா வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான சம்பவம் !!? by ஆசிரியர் July 22, 2026 written by ஆசிரியர் July 22, 2026 0 comments 57 Reading Mode கள்ளக்காதல் , வரதட்சனை கொடுமை ! எஸ்ஐ கணவனை உள்ளே தூக்கி வைத்த வக்கீல் மனைவி.! தரமான சம்பவம்.! ரூ.50 லட்சம், நிலம், வீடு வாங்கிட்டு வா.. எஸ்ஐ கணவனை உள்ளே தூக்கி வைத்த வக்கீல் மனைவி.! தரமான சம்பவம்.! கள்ள காதலிக்கு லவ்யூ மெசேஜ் அனுப்பி, மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் காவல் துறையில், கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் பயரப்பா. இவரின் மனைவி ரேவதி, வழக்கறிஞர் ஆவார். சம்பவத்தன்று ரேவதி தனது கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து பயரப்பாவை கைது செய்த நிலையில், விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி தம்பதிகளுக்குள் நடந்த பிரச்னையின்போது, காவல் உதவி ஆய்வாளர் பயரப்பா ரேவதி மற்றும் அவரின் தந்தையை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதன்பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தம்பதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 3 ஆண்டுகளாக இவர்களின் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்னையும் இல்லாத நிலையில், பயரப்பா ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார். மேலும், வீடு, நிலம் வாங்கித்தர வேண்டும் என்றும் சித்ரவதை செய்துள்ளார். மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் பயரப்பா மனைவியுடன் பிரச்சனை செய்வதை வாடிக்கையாக்கிய நிலையில், இன்ஸ்டாகிராமில் பெண்களுடன் பேசி லவ்யூ மெசேஜ் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனை ரேவதி கேட்டபோது அவரையும், குழந்தைகளையும் தாக்கி அவதூறு பேசி இருக்கிறார். பயரப்பா ஏற்கனவே தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வெம்பக்கோட்டையில் பரபரப்பு ! தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு !!? next post லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலைய ம் எஸ்ஐ ஜான்சன் – ஏட்டு நாகராஜ் சஸ்பெண்ட் !!? You may also like உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –... September 18, 2026 மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்... September 17, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.