விருதுநகர் வெம்பக்கோட்டையில் பரபரப்பு ! தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு !!? by ஆசிரியர் July 22, 2026 written by ஆசிரியர் July 22, 2026 0 comments 5 Reading Mode வெம்பக்கோட்டையில் பரபரப்பு ! தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு !!? விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு கடைகளுக்கான தடையின்மைச் சான்று, பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.1.40 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாசில்தார் ஆண்டாள், நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் நாகராஜ், வி.ஏ.ஓ. கலைச்செல்வி, கிராம உதவியாளர் மருதுபாண்டியன் மற்றும் தனிநபர்கள் சரவணகுமார், பாலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்ச ஒழிப்பு துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட் ! லஞ்சம் பெறுவதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முதலிடம் !!? next post வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான சம்பவம் !!? You may also like தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர்... July 21, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.