erode 23 – லட்சம் பணத்தை ஏமாற்றிய இளஞ்செழியன் கைது ??? க்ரைம் போலீசார் நடவடிக்கை !! by ஆசிரியர் June 25, 2026 written by ஆசிரியர் June 25, 2026 0 comments 3 Reading Mode 23 லட்சம் பணத்தை ஏமாற்றிய இளஞ்செழியன் கைது ??? க்ரைம் போலீசார் நடவடிக்கை !! மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் ரூபாய் 23 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன் கைது.மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை. மனுதாரர் S.சீனிவாசன் ஆ/வ.65, த/பெ.முருகேசன், எம்.ஜி.ஆர்.நகர், சென்னை என்பவரிடம் அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆ/வ.66, த/பெ.லட்சுமணன், என்பவர் தனக்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் திரு எஸ்.எஸ்.சிவசங்கரன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மனுதாரரின் மகனுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி இதுவரை வேலை வாங்கி தரவில்லை. கடந்த 2023 முதல் 2025 வரை பல்வேறு தவணைகளாக சுமார் ரூ. 23 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பிதராமலும் ஏமாற்றிய அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.23 லட்சம் பணத்தை மீட்டுத் தருமாறு சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து தலைமறைவாக இருந்த அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன்,(வயது 60) த/பெ.லட்சுமணன் என்பவரை (24.06.2026) ஈரோட்டில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து District Educational Officer, P.E.T என்று குறிப்பிடப்பட்ட இரண்டு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் எதிரி இது போன்று பல நபர்களை ஏமாற்றி உள்ளதால் இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post அரசு டாக்டரின் அட்டகாசம் அம்பலமானது எப்படி? ஏழு ஆண்டுகால பகல் கொள்ளை !! என்ன ஒண்ணும் செய்ய முடியாது மிரட்டும் மருத்துவர் மார்கண்டன் !!? next post பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள் சஸ்பெண்ட்!!?? You may also like பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை ! முன்னாள் எஸ்டிஎப்... June 29, 2026 பவானியில் பரபரப்பு ! 74 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்... June 24, 2026 ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி !... June 20, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.