தர்மபுரி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ! அஞ்சல் மற்றும் கொரியர் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு !மாவட்ட எஸ்பி அறிவுரை !!? by ஆசிரியர் August 7, 2026 written by ஆசிரியர் August 7, 2026 0 comments 3 Reading Mode போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை !அஞ்சல் மற்றும் கொரியர் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு !!மாவட்ட எஸ்பி அறிவுரை !!? தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் விநியோக சேவை (Courier Service) na நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கும் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் (05.08.2026 ) நாளில் நடைபெற்றது. கூட்டத்தில், விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், பார்சல் அனுப்புபவரின் முழுமையான விவரங்களை பதிவு செய்தல், சந்தேகத்திற்கிடமான பார்சல்களை உரிய முறையில் பரிசோதித்தல், சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட தனிப்பிரிவுக்குத் தகவல் தெரிவித்தல், அரசு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுதல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் விநியோக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நண்பனை கொன்று வீடியோ வெளியிட்ட நண்பர்கள் ! இருவர் தலைமறைவு !!? next post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டல் ! 40 லட்சம் பணம் பறித்த வழக்கு !! ஆய்வாளர் முகம்மது புஹாரி கைது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.