கோயம்புத்தூர் நண்பனை கொன்று வீடியோ வெளியிட்ட நண்பர்கள் ! இருவர் தலைமறைவு !!? by ஆசிரியர் August 7, 2026 written by ஆசிரியர் August 7, 2026 0 comments 4 Reading Mode நண்பனை கொன்று வீடியோ வெளியிட்ட நண்பர்கள் ! இருவர் தலைமறைவு !!? கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு முற்றியதில் அஸ்வின் (வயது 22) என்ற இளைஞர் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, கொலை தொடர்பான பதிவுகள் Instagram-ல் பதிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாதேஷ் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்குப் பிறகு இருவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து கோயம்புத்தூர் கிணத்துக்கடவு போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை பயணம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது ?? உப்புக்கு சப்பில்லாத காரணங்களுக்காக நண்பனையே கொலை செய்யும் அளவிற்கு 16 வயது இளைஞர்களின் மனநிலை சொல்கிறது என்றால் , தமிழக இளைய சமுதாயத்தின் ஒழுங்கு கட்டமைப்பு முற்றிலுமாக அழிந்து விட்டது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. தமிழக அரசு இளைஞர்களின் மனநிலையை சீர்படுத்தி அவர்களின் வாழ்க்கை பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இளைய சமுதாயத்தினரை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமாய் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!? next post போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ! அஞ்சல் மற்றும் கொரியர் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு !மாவட்ட எஸ்பி அறிவுரை !!? You may also like கோவை மாவட்ட காவல்துறை ! குற்றத்திற்கு இங்கு இடமில்லை ! July 22, 2026 லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலைய... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.