kanyakumari ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் ! ஒரு கிராமம், ஒரு காவலர், இரு சிசிடிவி !!? by ஆசிரியர் June 8, 2026 written by ஆசிரியர் June 8, 2026 0 comments 19 Reading Mode ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் ! ஒரு கிராமம், ஒரு காவலர், இரு சிசிடிவி !!? கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்’ – CCTV அமைப்பது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடல். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்” மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் காவல்துறையினரும் பொதுமக்களும் கைகோர்த்து செயல்படுவதுதான். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு உட்கோட்ட அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் “நம்ம ஊரு காவலர்கள்” நேரடியாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் தலைமையில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது இதில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் “நம்ம ஊர் காவலர்கள்” கலந்து கொண்டனர். சிசிடிவி கேமராக்களை கடைகளில் பொருத்துவதை பற்றியும் சிசிடிவி கேமராக்களை பயன்படுத்துவதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் குற்றவாளிகளை மிக விரைவாகக் கண்டறியவும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பெரும் துணையாக இருக்கின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிராமத்தையும் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைநோக்கு பார்வையின்படி, மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது குறித்தும், அதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cctv stalin ips Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஒன்றரை வயது குழந்தையை கொன்ற கொலைகாரன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள் !!? next post 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் !?? You may also like குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு... July 7, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக... June 25, 2026 குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.