dintigul திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 7 Reading Mode திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்சன் ! சிக்குண்ட கஞ்சா விற்பனையாளர் இருவர் கைது !!? திண்டுக்கல்லில் போதைப்பொருட்கள் மெத்தபெட்டமைன், கஞ்சா சப்ளை செய்த இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நாகல்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகப்படும்படி நின்ற காரை சோதனை செய்ததில் 1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என்., சாலையைச் சேர்ந்த ரகுராம் (வயது 33), திண்டுக்கல் பேகம்பூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது 32), என தெரியவந்தது. கஞ்சா சப்ளை செய்ய முக்கிய நபரை அழைத்து செல்ல அவர்கள் காத்திருந்த போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து மற்றவர்களையும் பிடிக்க அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி விட்டார். அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் 0.85 மி.கி., உயர் ரக பவுடர் போதைப் பொருளான மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ரகுராம், அப்துல் பாசித் கைது செய்யப்பட்டனர். ஒரு கார், டூவீலர், 3 அலைபேசிகள், ரூ.8 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை ! பொதுமக்களால் குவியும் பாராட்டுக்கள் !!? next post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.