dintigul பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 5 Reading Mode மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!? பழனி அருகே: கோவில் திருவிழாவில் மது அருந்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர்,போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி. பழனி அருகே கீரனூரை அடுத்த கோரிக்கடவு கிராமத்தில் நேற்று முன்தினம் கோவில் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு கீரனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு பார்த்திபன் ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திருவிழாவில் மது அருந்தி இருந்த சில வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். அதற்கு, பாதுகாப்புக்கு வந்த நீங்களே மது அருந்தி உள்ளீர்கள் என்று வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கீரனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு பார்த்திபன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? next post நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !! You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.