dintigul திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி வைத்து தூக்கிய காவல்துறை !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 13 Reading Mode திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி வைத்து தூக்கிய காவல்துறை !!? திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம். கண்ணி வைத்து அலேக்காக வைத்து தூக்கிய காவல் துறை !! திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஸ்பா மசாஜ் சென்டர் மறைவில் ஹைடெக் முறையில் விபச்சாரம் நடந்து வந்ததாக வந்த தகவலை அடுத்து,போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகரில் சில மசாஜ் சென்டர்களில் விதிமீறல் நடப்பதாக ரகசிய தகவலின் படி நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுடன் அக்ரஹார சாலை, மங்கை டவரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அங்கு அழகிகளை வைத்து ஹைடெக் முறையில் விபசார தொழில் நடத்தப்பட்டது தெரியவந்தது. ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சென்னை கிண்டியைச் சேர்ந்த பத்மா (வயது 37), திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 44), வடமதுரை வேல்வார்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 50) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.அங்கிருந்த பெண்களையும் மீட்டு, மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் காவல் துறையினரின் கண்களை கட்டி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி வசூல் செய்து வரும்., பிரபல பத்திரிகைகளில் காவல் துறை சார்ந்த செய்திகளை சேகரிக்கும் காவலர்களின் நண்பராக வளம் வரும் நிருபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இன்னும் பல முக்கிய புள்ளிகளின் பெயர் பட்டியல் விரைவில் வெளிவரும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default spa vibasaram Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு !! next post குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !! குற்றவாளிகள் கைது !!! You may also like திண்டுக்கல் வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறிப்பு... July 5, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள்... June 25, 2026 தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்... June 20, 2026 பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை... June 20, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! June 16, 2026 திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா... June 16, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !... June 16, 2026 திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி... June 7, 2026 திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்... June 4, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.