nagapattinam நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !! by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 0 Reading Mode நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !! நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை போலீசார் மீட்டு, மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். கடந்த 16ஆம் தேதி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்தார். தகவலறிந்த சிங்கப்பெண் அதிரடிப்படை, வெளிப்பாளையம் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இணைந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகர் என்பவரின் மனைவி இயேசுமணி (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவரது மகன் தருண் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். இயேசுமணி மற்றும் அவரிடம் இருந்த உடைமைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவரது மகனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதுடன், சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரின் இந்த மனிதநேய நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default good activity Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!? next post விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.