chennaiUncategorized போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர் ! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா !!? by ஆசிரியர் June 21, 2026 written by ஆசிரியர் June 21, 2026 0 comments 5 Reading Mode போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிகையாளர். போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கடந்த 30 ஆண்டுகளாக பணம் பறித்து வரும் போலி பத்திரிகையாளர் நெல்லை கோபால் என்பவர் பற்றி தமிழக முதல்வர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் ,உளவுத்துறை அதிகாரிகள், போக்குவரத்து ஆணையர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு நெல்லை கோபாலால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்த புகார் கடிதம் நமது அலுவலகத்திற்கும் அனுப்பி இருக்கிறார்கள். அந்த புகார் கடிதத்தில் என்ன குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் நமது வாசகர்களுக்கு அப்படியே வழங்குகிறோம். போலி பத்திரிகையாளர் நெல்லை கோபால். பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சில டுபாக்கூர்ர்களும் போலி பத்திரிகையாளர்களும் அதிகாரிகளை மிரட்டியும் கெஞ்சியும் மாதமாதம் பிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர். அதில் முதலிடத்தில் இருப்பவர் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி பத்திரிகையாளர் என்ற பெயரில் நெல்லை கோபால் என்பவர். பிரேக் இன்ஸ்பெக்டர் பிரபு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஒவ்வொருஞ மாதமும் சுமார் 30 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை மாதம் ஒன்றுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் மிரட்டி செலான் என்ற பெயரில் வசூல் செய்து வருகிறார். போக்குவரத்து துறை ஆணையர். பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ். தனக்கு பணம் தராத அதிகாரிகள் மீது மொட்டை கடிதம் எழுதி போலியான பெயர்களில் உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதி அதை தான் நடத்தி வரும் செல்லாக்காசு பத்திரிகையில் அதாவது நமது அரண் என்ற பத்திரிகையில் செய்தி போட்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார். இப்படித்தான் இவர் கடந்த 30 ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சம்பாதித்து இருக்கிறார். தனக்கு லஞ்சம் தராத அதிகாரிகளை வாட்ஸ் அப்பில் அழைத்து நக்கீரன் ரிப்போர்ட்டர் ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டர் , குமுதம் ரிப்போட்டர், தினமலர் ரிப்போர்ட்டர் ஆகியோர் என்னிடம் கேட்டார்கள் நான் உங்களைப் பற்றி தவறாக எதுவும் சொல்லாமல் நல்ல அதிகாரி யாரோ அவருக்கு ஆகாதவர்கள் பொய் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் செய்தியெல்லாம் போடத் தேவையில்லை நான் அதிகாரியிடம் பேசி உங்களை ஏதாவது கவனிக்க சொல்லுகிறேன் என்று சொல்லி அந்த அதிகாரிகளிடத்தில் ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தராமல் இவரை வைத்துக் கொள்வார். அதிலிருந்து அந்த அதிகாரி மாதம் இவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பு என்ற பெயரில் தருவார். மாதிரி பல அதிகாரிகள் அவருக்கு மாத மாதம் கப்பம் கட்டி வருகிறார்கள். போலி பத்திரிகையாளர் நெல்லை கோபால். பணம் தராத அதிகாரிகள் பற்றி தன்னுடைய உப்புக்களுக்கு உதவாத பத்திரிகையில் அவர் பெண் சித்தர் அவருக்கு இரண்டு மனைவிகள் மூன்று வாய்ப்பாட்டிகள் என்று தப்பு தப்பாக செய்தி போட்டு மிரட்டி பணம் சம்பாதிப்பது ஏன் தொழிலாக கொண்டுள்ளார். தன்னிடம் பணியாற்றும் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள் செல்போனில் இருந்து பத்திரிகையாளரைப் போல வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டு மிரட்டி அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணம் சம்பாதிப்பார்.இது மாதிரி இவர் சம்பாதித்த சொத்து மதிப்பு மொத்தம் 100 கோடிகளை தாண்டும்.இப்படி நாமக்கல்லை சேர்ந்த ஒரு போக்குவரத்து அதிகாரியிடம் தனக்கு மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றும் குடும்ப செலவிற்கு பணம் வேண்டும் என்றும் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுள்ளார். முக்கண்ணன். அந்த அதிகாரியை பற்றி தவறுதலாக செய்தியை தன்னுடைய பத்திரிகையில் எழுதி பல அதிகாரிகளிடம் கூழ் மூட்டி அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவரை தன் மனைவியுடன் ரயிலில் விழுந்து இறந்து விட்டார். ஏன் அவரை நெல்லை கோபால் கொன்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் நடத்தும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி எந்தவித அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. அதற்கு அனுமதி தராத அதிகாரிகள் மீது போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு பொய் புகார் அனுப்பி வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பெயரைச் சொல்லி பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பணி மாற்றம் செய்து தருகிறேன் என்று 50 கோடி வரை பணம் வாங்கிக் கொண்டு இதுவரை எந்த வேலையும் செய்து தராமல் பாதிக்கப்பட்வர்களுக்கு பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன். பணம் கேட்கும் அதிகாரிகளை நீங்கள் யோக்கியமா ஊழல் செய்யவில்லையா? எத்தனை லட்சங்கள் நீங்கள் லஞ்சமாக சொத்து சேர்த்தீர்கள் அதை எல்லாம் நான் எழுதட்டுமா ஒழுங்காக இருங்கள் என்று மிரட்டி வருகிறார்.எனவே பத்திரிகையாளர் போர்வையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதித்து வரும் நெல்லை கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அதிகாரிகளும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவர்களைத் தள்ளியுள்ளார். சம்பத் குமார். போக்குவரத்து துறை அதிகாரி பூங்குழலி, பிரபு ,சம்பத் என பல அதிகாரிகளை மிரட்டி அவர்களைப் பற்றி தவறுதலாக பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் எழுதி வரும் நெல்லை கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே போக்குவரத்து துறை அதிகாரிகளை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவர்களது ஊழியர்கள் பற்றியும் தவறுதலாகவும் அவதூறாகவும் தங்களுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எழுதி வரும் போலி பத்திரிகையாளர் டுபாக்கூர் பத்திரிகையாளர் என்கிற பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தரும் ரவுடி நெல்லை கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் தங்களது அலுவலகத்திற்கு அவர் சம்பாதித்து வைத்துள்ள சொத்து மதிப்பு வீடு மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். இப்படிக்கு.போலி பத்திரிகையாளர் நெல்லை கோபாலால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default fake journalist nellai gopal Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு !!? next post சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் ! கல்லாக்கட்டும் பாலசுப்பிரமணி !! You may also like FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில்... June 29, 2026 உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய்... June 26, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.