wrold சமூக ஊடக மோசடிகள் ! ஸ்ரீலங்கா போலீசார் எச்சரிக்கை !!? by ஆசிரியர் June 24, 2026 written by ஆசிரியர் June 24, 2026 0 comments 3 Reading Mode சமூக ஊடக மோசடிகள் ! ஸ்ரீலங்கா போலீசார் எச்சரிக்கை !!? சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸார் எச்சரிக்கைசமூக ஊடகங்கள் மூலம் பெண்களை நட்பாக்கி, அவர்களை ஏமாற்றி நிதிச் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. சந்தேக நபர்கள் திருமண வாக்குறுதி அளித்து சொத்துக்களைப் பறித்தல் மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்து மயக்கமடையச் செய்து திருட்டு அல்லது துஷ்பிரயோகங்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் விடுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இணையத்தில் அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களுக்கு பணம், நகைகளை வழங்க வேண்டாம். தனிப்பட்ட விபரங்கள், ரகசிய புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர வேண்டாம்.சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் சந்திப்புகளைத் தவிர்க்கவும். இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம், சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் அல்லது 118, 119, 107, 109 ஆகிய அவசர இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cyber crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் – பதிவாளர் மகாலட்சுமி கைது !!? next post லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! ரூபாய் 15,000, லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.