சிவகங்கை சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் ! நிர்வாணமாக்கி 50 லட்சம் கேட்டு மிரட்டல் !!? by ஆசிரியர் July 7, 2026 written by ஆசிரியர் July 7, 2026 0 comments 8 Reading Mode சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் ! நிர்வாணமாக்கி 50 லட்சம் கேட்டு மிரட்டல் !!? சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபரை காதல் வலையில் சிக்கவைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். கவிதா தமிழ்ச்செல்வன் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அவரை கைபேசியில் தொடர்பு கொண்ட கவிதா என்ற பெண், நயமாக பேசி நட்பு வளர்த்ததாக கூறப்படுகிறது.பின்னர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, ஜூன் 9-ஆம் தேதி ஜிபே மூலம் ரூ.4,500 பெற்றுக்கொண்டுள்ளார். இதன் பின்னர், ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வருமாறு அழைத்த கவிதா, தனிமையில் பேசலாம் என்று கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்ததைத் தொடர்ந்து பைனான்சியர் எங்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவரை நிர்வாணமாக்கி பல லட்சங்கள் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்திற்குப் பிறகு வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கவிதா மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபரை காதல் வலையில் சிக்கவைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் ஒருவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? next post காக்கியின் கம்பீரம் ! விஜயகுமார் ஐபிஎஸ் நினைவஞ்சலி !! You may also like கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15... July 15, 2026 திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு... July 10, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.