சிவகங்கை சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை !!? by ஆசிரியர் July 15, 2026 written by ஆசிரியர் July 15, 2026 0 comments 14 Reading Mode சிவகங்கை தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை !!? சிறுமியின் புகைப்படத்தை தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவருக்குPOCSO மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் தண்டனை! சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட வழக்கில், பரமக்குடியைச் சேர்ந்த வாழவந்தான் (எ) வாசு என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் கீழ்கண்ட தண்டனை வழங்கினார்கள். நீதிமன்றம் விதிக்கப்பட்ட தண்டனைகள்: POCSO Act – பிரிவு 11(5) : 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ₹1,000 அபராதம்தகவல் தொழில்நுட்பச் சட்டம் – பிரிவு 67(A) : 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ₹1,000 அபராதம்தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் – பிரிவு 4 : 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ₹1,000 அபராதம்இந்திய தண்டனைச் சட்டம் – பிரிவு 506(ii) : 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ₹1,000 அபராதம்இந்திய தண்டனைச் சட்டம் – பிரிவு 294(b) : 3 மாதங்கள் சிறைத் தண்டனை. மேற்கண்ட தண்டனைகளின் மொத்தம் 12 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத் தண்டனை, மற்றும் ₹4,000 அபராதம் ஆகும். எனினும், நீதிமன்றம் அனைத்து தண்டனைகளையும் ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதால், குற்றவாளி 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ₹4,000 அபராதம் அனுபவிக்க வேண்டும். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default punishment . Child Safety First Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post அமலாக்கத் துறையின் சோதனை வளையத்தில் சிக்கிய ! அருன் ஐபிஎஸ் – மனைவி ஐஆர் எஸ் அதிகாரி, வீட்டில் சோதனை !!? next post தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !!? You may also like வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை... September 17, 2026 சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !... September 4, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.