கோயம்புத்தூர் லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலைய ம் எஸ்ஐ ஜான்சன் – ஏட்டு நாகராஜ் சஸ்பெண்ட் !!? by ஆசிரியர் July 22, 2026 written by ஆசிரியர் July 22, 2026 0 comments 6 Reading Mode லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலையம் எஸ்ஐ ஜான்சன் – ஏட்டு நாகராஜ் சஸ்பெண்ட் !!? லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல்!பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் எஸ்ஐ. ஜான்சன் மற்றும் ஏட்டு நாகராஜ் சஸ்பெண்ட் – கோவை எஸ்.பி. பவன் குமார் ரெட்டி அதிரடி உத்தரவு! பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் ஏட்டு நாகராஜ் ஆகியோர் தொடர்பான லஞ்சப்புகார் விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. வழக்கு தொடர்பாக ஒருவரை மிரட்டி ₹5,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்தப் பணத்தை பின்னர் சம்பந்தப்பட்ட நபரிடமே திருப்பிக் கொடுக்க முயன்றது தொடர்பான உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் அடிப்படையில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் எஸ்ஐ. ஜான்சன் மற்றும் ஏட்டு நாகராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (Suspension) செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, IPS உத்தரவிட்டுள்ளார். மேலும், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அரசு விதிகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான சம்பவம் !!? next post கோவை மாவட்ட காவல்துறை ! குற்றத்திற்கு இங்கு இடமில்லை ! You may also like கோவை மாவட்ட காவல்துறை ! குற்றத்திற்கு இங்கு இடமில்லை ! July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.