திருப்பத்தூர் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? by ஆசிரியர் July 28, 2026 written by ஆசிரியர் July 28, 2026 0 comments 14 Reading Mode லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (SSI) ராமகிருஷ்ணன், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீட்டிய திட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் !! ஒருவர் கைது !!? next post கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.