கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் !! ஒருவர் கைது !!? by ஆசிரியர் July 28, 2026 written by ஆசிரியர் July 28, 2026 0 comments 4 Reading Mode குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் !! ஒருவர் கைது !!? கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செண்பகமராமன் புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேற்கொண்ட சோதனையில் செண்பகராமன் புதூர் ஔவையார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் முகமது என்பவரின் மகன் பாபு உசேன்(37) என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 1.350 கிலோ கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்து நாகர்கோவில் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்… Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , மெச்சத் தகுந்த பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!? next post லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? You may also like கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,... July 7, 2026 குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்... July 5, 2026 குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.