கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர் திருட்டு !! கைவரிசை காட்டிய பெண் குற்றவாளி கைது !!? by ஆசிரியர் September 18, 2026 written by ஆசிரியர் September 18, 2026 0 comments 6 Reading Mode குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர் திரட்டு !! கைவரிசை காட்டிய பெண் குற்றவாளி கைது !!? ATM மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் திருடி பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய வழக்கில் பெண் குற்றவாளி கைது – கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பல்வேறு ATM மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி (Attention Diversion), அவர்களது ATM அட்டைகளை மாற்றி மோசடி செய்து, வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார்கள் சம்பந்தப்பட்ட ATM மையங்கள். வெட்டுவெண்ணிமடம் IOB ATM. நாகர்கோவில் நீதிமன்றம் அருகிலுள்ள IOB ATM. WCC கல்லூரி அருகிலுள்ள Indian Bank ATM. மீனாட்சிபுரம் IOB ATM. ராமன்புதூர் SBI ATM. மேற்கண்ட ATM மையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் உதவி செய்வது போல் நடித்து, அவர்களது ATM அட்டைகளை பெற்று பணம் எடுப்பது போல பாசாங்கு செய்து, பின்னர் வேறு ATM அட்டைகளை மாற்றிக் கொடுத்து ஏமாற்றி, அவர்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷுல் நாகர், IPS அவர்கள், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையில், வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலைய போலீசார் இணைந்து பல்வேறு CCTV காட்சிகள், மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ATM மோசடி தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தேனி மாவட்டம், ராஜகோபாலன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி மணிமேகலை (வயது 29) என்பவர் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வடசேரி காவல் நிலைய போலீசார் மணிமேகலையைக் கைது செய்து, மேலும் தொடர்புடைய மோசடி வழக்குகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற வீடியோ !? வெளியிட்ட சவுக்கு சங்கரை வன்மையாக கண்டிக்கிறோம் !!? next post குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் ! எஸ்பி அன்ஷூல் நாகர் ஐ.பி.எஸ் திடீர் ஆய்வு !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.