தூத்துக்குடி முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!? by ஆசிரியர் August 25, 2026 written by ஆசிரியர் August 25, 2026 0 comments 5 Reading Mode முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு அப்பாவின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!? தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை படு கொலைவழக்கு –W.P.Crl.(MD).No.4833 of 2026, 24.08.2026மதுரை கிளை – சென்னை உயர்நீதிமன்றம் – சாத்தான்குளம் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இரட்டை படுகொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாத்தான்குளம் முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் மனைவி வித்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது கணவரான ரகு கணேஷின்தந்தை பரமசிவம் அவர்கள் 22.08.2026 அன்று மரணமடைந்ததால், 25.08.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நடைபெறும் இறுதிச்சடங்குகளை செய்யும் வகையில், 16 நாட்கள் அவசர விடுப்பு (Emergency Leave) வழங்க வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த மதிப்பிற்குரிய நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் முருகேசன் ஆகியோர், இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள 2 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள் 25.08.2026 காலை 6.00 மணிக்கு, மதுரை மத்திய சிறையிலிருந்து களக்காடு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 26.08.2026 காலை நடைபெறும் இறுதிச்சடங்கு மற்றும் சடங்குகளை முடித்த பின்னர், அன்றைய தினம் மாலை 5.00 மணிக்குள் மதுரை மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும். தேவையான காவல் பாதுகாப்பு (Escort) வழங்க வேண்டும்.Escort செலவுகளை மனுதாரர் ஏற்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு நகலுடன் தேவையான ஆவணங்களை சிறை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். விடுப்பு காலத்தில் சிறை விதிமுறைகள் மற்றும் Jail Manual-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் கைதி கடைபிடிக்க வேண்டும். இதன்படி, 16 நாட்கள் அவசர விடுப்பு கோரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் 2 நாட்கள் அவசர விடுப்பை வழங்கி, தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இறுதிச்சடங்குகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!? next post வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!? You may also like தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா... July 26, 2026 பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து... July 23, 2026 தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !!... July 11, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.