Thoothukudi district சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ! ஏழு ஆண்டுகள் சிறை !! போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு !!? by ஆசிரியர் June 17, 2026 written by ஆசிரியர் June 17, 2026 0 comments 2 Reading Mode சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ! 7 ஆண்டு சிறை !! போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு !!? கடந்த 2023ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் (ஜூன் 16) தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2023ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொந்தரவு அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த குற்றாலம் மகன் முருகானந்தன் (வயது 46) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இவ்வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கினார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். குற்றவாளி முருகானந்தனுக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 15,000/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், இச்சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 8 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பிரீத்தா தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முருகானந்தன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default poksho Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை ! வாலிபர் ஒருவர் கைது !!? next post லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.