kanyakumari குமரியில் போக்சோ சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட எஸ்பி டாக்டர். ஆர். ஸ்டாலின் வெளியிட்டார்!! by ஆசிரியர் May 9, 2026 written by ஆசிரியர் May 9, 2026 0 comments 29 Reading Mode குமரியில் போக்சோ சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட எஸ்பி டாக்டர். ஆர். ஸ்டாலின் வெளியிட்டார்!! கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ விழிப்புணர்வு இயக்கம் தீவிரம் …. பள்ளி, கல்லூரிகளில் ஒட்டப்படவுள்ள சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஆர்.ஸ்டாலின் IPS கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போக்சோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் நிமிர் (NIMIR) குழுவுடன் இணைந்து சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒட்டப்படவுள்ளதாகவும், மாணவர்கள் தங்களது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து உட்கோட்ட நிமிர் குழுவை சேர்ந்த பெண் போலீசார் கலந்துகொண்டனர். பொது மக்களின் பாதுகாப்பிற்காக பலவிதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை தன் இரு கண்கள் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ், அவர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ மாணவிகளும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post புதுகை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அறிவிப்பு!? தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கம்!? next post முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பைக் விபத்தில் மரணம்?? You may also like குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு... July 7, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக... June 25, 2026 குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.