tuticorin காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் – பண மோசடி முயற்சி உஷார்! by ஆசிரியர் May 7, 2026 written by ஆசிரியர் May 7, 2026 0 comments 23 Reading Mode காவல்துறை எச்சரிக்கை!?தூத்துக்குடி எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் – பண மோசடி முயற்சி உஷார்! தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் போலி முகநூல் (Facebook) பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் திரிக்கப்பட்ட பக்கத்தின் மூலம் பொதுமக்களிடம் பண உதவி கேட்டும், பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டும் வருவது காவல்துறையின் கண்காணிப்பில் தெரிய வந்தது. காவல்துறை உயர் அதிகாரியின் பெயரிலேயே மோசடி நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் போலிப் பக்கத்தை உருவாக்கியது யார்? பின்னணியில் இருக்கும் கும்பல் எது? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்துக் காவல்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வருமாறு: காவல்துறை அதிகாரிகள் யாரும் முகநூல் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். அதிகாரிகளின் பெயரில் வரும் பணக் கோரிக்கைகளையோ அல்லது மிரட்டல்களையோ பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத நபர்களுக்கோ அல்லது சந்தேகத்திற்குரிய கணக்குகளுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cyber crime Tuticorin Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தேனி மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – கலெக்டர் ரஞ்சித் சிங் தகவல். next post பழனி காவல்துறையின் அதிரடி !? நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது! ஐந்து பவுன் நகை மீட்பு!! You may also like புதூர் போலீசார் திடீர் சோதனை!?பணம் வைத்து சூதாடிய நால்வர் கைது!? May 13, 2026 க்யூ பிரிவு போலீசார் அதிரடி !?இலங்கைக்கு கடத்த முயன்ற ₹... May 13, 2026 முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பைக் விபத்தில் மரணம்?? May 10, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.