kanyakumari 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் !?? by ஆசிரியர் June 8, 2026 written by ஆசிரியர் June 8, 2026 0 comments 1 Reading Mode 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் !?? குலசேகரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடி. குலசேகரம் மற்றும் களியக்காவளை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிழக்கம்பாகம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனை சாவடியை தரம் உயர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்தச் சோதனை சாவடியானது மாவட்ட எல்லைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் கடத்தல்களை தடுப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குலசேகரம் காவல் நிலையம்.குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 முக்கிய சந்திப்புகளில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு அறையை திறந்து வைத்தார். இதன் முக்கிய நோக்கம் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். களியக்காவிளை காவல் நிலையம். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் 50 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்கள்.அதனை படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் இருந்து கண்காணிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியின் போது தக்கலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் மற்றும் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளர் விமலன் ஆகியோர் உடனிருந்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 90 cctv camera opening Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் ! ஒரு கிராமம், ஒரு காவலர், இரு சிசிடிவி !!? next post குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் !? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.