kanyakumari குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக மாற்றும் திட்டம்!! by ஆசிரியர் June 25, 2026 written by ஆசிரியர் June 25, 2026 0 comments 2 Reading Mode குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரி திட்டம்!! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ZERO ACCIDENT KUMARI இலக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் “சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம்” தொடக்கம். விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் ZERO ACCIDENT KUMARI என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், IPS அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், “சாலை பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்கள் இணைந்து செயல்படும் போது மட்டுமே விபத்தில்லா சமூகத்தை உருவாக்க முடியும்” என்று வலியுறுத்தினார். தன்னார்வலர்களின் முக்கிய பணிகள்: இரவு நேரங்களில் தெளிவாக தெரியாத பேரிகேட்கள், டிவைடர்கள் போன்ற இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து தகவல் வழங்குதல். புதிய வேகத்தடைகள் அமைக்க வேண்டிய பகுதிகளை பரிந்துரைத்தல். நடைபாதை ஆக்கிரமிப்புகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விளம்பரப் பதாகைகள் மற்றும் தவறாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவுதல். அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, உடனடி நடவடிக்கைக்கு வழிவகை செய்தல். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் உரை நிகழ்த்தி சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்தில்லா கன்னியாகுமாரி யாக உருவாக்கும் விதத்தில் உரையாற்றியுள்ளார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default awareness Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 5000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது !!? next post சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு !! You may also like குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.