கன்னியாகுமரி பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு , மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய “நிமிர் குழு”(THE RISING TEAM). by ஆசிரியர் July 7, 2026 written by ஆசிரியர் July 7, 2026 0 comments 10 Reading Mode பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய “நிமிர் (The Rising Team)” குழு. சிறந்த சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு தனிமனிதனின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ளும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் செயல்படும் நிமிர் குழுவினருக்கு, வேதநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் ஒரு வார காலமாக பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிமிர் குழுவினர் மாணவியின் வீட்டிற்குச் சென்று, பெற்றோர் மற்றும் மாணவியிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரிய ஆலோசனைகளை வழங்கினர். பின்னர் மாணவியை மீண்டும் பள்ளியில் அழைத்து சென்று , தொடர்ந்து கல்வியை மேற்கொள்ள தேவையான வழிகாட்டுதலையும் வழங்கினர். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டும் மாணவி பள்ளிக்கு தொடர்ந்து வராத சூழலிலும், நிமிர் குழுவினர் பலமுறை நேரில் சென்று அறிவுரை வழங்கி, அவரை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வந்து கல்வியைத் தொடரச் செய்திருந்தனர். ஒவ்வொரு குழந்தையின் கல்வியும் அவர்களின் எதிர்காலத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து, பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், ஒவ்வொரு மாணவரும் கல்வியைத் தொடர்ந்து பயிலவும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் “நிமிர் – The Rising Team” குழுவினர் செயல்பட்டு வருகிறது. நிமிர் குழுவை என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் மிகப்பெரிய சாதனைகளை செய்து வரும் மதிப்பிற்குரிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா. ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களை போலீஸ் விஷன் மற்றும் நங்கூரம் மீடியா நெட்வொர்க் வாயிலாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default Stalin IPS nimir Kulu Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு !!? next post ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? You may also like கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்... July 5, 2026 குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.