கன்னியாகுமரி ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? by ஆசிரியர் July 7, 2026 written by ஆசிரியர் July 7, 2026 0 comments 18 Reading Mode ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர குழு !!? உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்புக் கரம் நீட்டிய நிமிர் குழு(THE RISING TEAM) கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் மனிதநேய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் நிமிர் குழுவினர், ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு உரிய மருத்துவ உதவியை ஏற்பாடு செய்துள்ளனர். குளச்சல் பகுதியில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரிதங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாணப்பன் நாயர் என்பவரை நிமிர் குழுவினர் நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது, பல மாதங்களாக ஆதரவின்றி தோட்டப் பகுதியில் தங்கி வந்த அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்த்த நபர் தனது செலவில் இதுவரை சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றிருந்தாலும், தொடர்ந்து பராமரிக்க இயலாத நிலை இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நிமிர் குழுவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களை சந்தித்து முதியவரின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default Stalin IPS nimir Kulu Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு , மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய “நிமிர் குழு”(THE RISING TEAM). next post சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் ! நிர்வாணமாக்கி 50 லட்சம் கேட்டு மிரட்டல் !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.