சிவகங்கை கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு !! by ஆசிரியர் July 22, 2026 written by ஆசிரியர் July 22, 2026 0 comments 13 Reading Mode கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு !! சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேரை வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க சிவகங்கை மாவட்ட எஸ்பி தலைமையில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இத்தேர் திருவிழாவில் தன் கடமையை செவ்வனே செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த காரைக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் ஐபிஎஸ் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள். சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் வெளிநபர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, டோக்கன் வைத்திருந்தோர் மட்டுமே வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்பட்டனர். தேரோட்டத்தையொட்டி, ஐஜி விஜேந்திர பிதாரி, டிஐஜிகள் மணிவண்ணன், மூர்த்தி, எஸ்பிகள் சிவபிரசாத், ரவீந்திரகுமார் குப்தா, சீனிவாச பெருமாள், அதிவீர பாண்டியன், பாண்டியராஜன் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பட்டதோடு, 4 தேரோடும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் தேர் திருவிழா வினை கண்டுகளித்து இறையருள் பெற்று சென்றனர். இந் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் அவர்களுக்கே உரித்தான கருட பார்வையில் கடமை தவறாது காவல் பணியை மேற்கொண்டு இத்திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுத்து பொது மக்களின் நம்பிக்கையை பெற்றனர். எங்கு சென்றாலும் தன் பணியை கண்ணியத்தோடு கடமை தவறாது செய்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சேகர் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் வாயிலாக வாழ்த்துகிறோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாராட்டு சான்றிதழ் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !!? next post லஞ்ச ஒழிப்பு துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட் ! லஞ்சம் பெறுவதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முதலிடம் !!? You may also like வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை... September 17, 2026 சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !... September 4, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.