தூத்துக்குடி பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து மூன்று எஸ்பிக்கள் மாற்றம் !!? by ஆசிரியர் July 23, 2026 written by ஆசிரியர் July 23, 2026 0 comments 12 Reading Mode பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து மூன்று எஸ்பிக்கள் மாற்றம் !!? தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன், மதன், அபிஷேக் குப்தா என மூன்று பேர் ஒரே ஆண்டில் ஒரிரு மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் தற்போது விவாதப்பொருளாகி உள்ளது. ஆகஸ்டு மாதம், 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் அமர்ந்த ஆல்பர்ட் ஜான் மிகக் குறுகிய காலத்திலேயே, ஜனவரி மாதம் 2026 ஆம் ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார் பின்னர், சுமார் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிலம்பரசன் மாற்றப்பட்டு, அப்போது திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு தமிழகத்தில் ஆட்சி அமைந்த பின்பு, கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இருந்த மதன் மாற்றப்பட்டு, புதிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான், தற்போது 2 மாதத்திற்குள் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்பி அபிஷேக் குப்தா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவங்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சிவபிரசாத், கர்நாடகா மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகர் ஏ.எஸ்.பி.,யாக பணியை துவங்கினார். பின் மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். பின் மதுரை, தேனி, சிவகங்கையில் எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பணியிட மாற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post உடுமலையில் கஞ்சா விற்பனை ! 2.300kg கஞ்சா பறிமுதல் !! மூவர் கைது !!? next post இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து !!? You may also like மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி !... September 18, 2026 முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு... August 25, 2026 தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா... July 26, 2026 தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !!... July 11, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.