INDIA அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம்!!? by ஆசிரியர் June 1, 2026 written by ஆசிரியர் June 1, 2026 0 comments 3 Reading Mode உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம் !? ஜான்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளரை சில மர்ம நபர்கள் (குண்டர்கள்) திடீரெனச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த காவல் உதவி ஆய்வாளரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கினர். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அந்த காவலர் எவ்வளவோ கெஞ்சியும், அந்த நபர்கள் இரக்கமின்றி அவரைத் தொடர்ந்து அறைந்தனர் இக்கொடூரச் சம்பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் நடந்தபோதிலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எவரும் காவலரைக் காப்பாற்ற முன்வராமல் வெறும் தமாஷாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து ஜான்சி மாவட்ட காவல்துறை (@jhansipolice) உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை குண்டர்கள் தாக்கும்போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்து, சர்வ சாதாரணமாக செல்லும் நிலையில் பொதுமக்கள் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குண்டர்களை உத்தரப்பிரதேச மாநில அரசு கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default police attacks Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை கண்டு கொள்ளாத காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி !!? next post அதிகார ஆணவத்தில் வலம் வந்த குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா – ஒன்றரை வருடத்திலேயே பணியிட மாற்றம் !!? You may also like வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில்... June 16, 2026 மரணத்தின் விளிம்பிலும் மாவீரம் ! வீரத்தின் மறு பெயர் மீனாட்சி... June 14, 2026 இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஸ் சேத்... June 14, 2026 விமான விபத்தில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் !! June 14, 2026 மூன்று ஆண்டுகளாக முட்டிக்கொண்ட ஐஏஎஸ் – ஐபிஎஸ் மோதல் மத்தியஸ்தர்... June 14, 2026 விமானப்படை ஓடுதளத்தில் தர இறங்கிய விமானம் தீப்பிடித்து விபத்து !? June 13, 2026 இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர்... June 2, 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மூத்த தாவரவியல் ஆசிரியை... May 17, 2026 இந்தியா அக்னி-6 ஏவுகணை சோதனையில் வெற்றி!? May 9, 2026 இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!! May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.