Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
kanyakumari

அதிகார ஆணவத்தில் வலம் வந்த குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா – ஒன்றரை வருடத்திலேயே பணியிட மாற்றம் !!?

by ஆசிரியர் June 1, 2026
written by ஆசிரியர் June 1, 2026 0 comments
3
Reading Mode

அதிகார ஆணவத்தில் வலம் வந்த குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஒன்றரை வருடத்திலேயே மாற்றம் !!?

நெல் கொள்முதல் விவகார முறைகேட்டால் ஆட்சியர் அலுவலகத்திற்கு டிராக்டரில் நெல்லை கொண்டு வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் மாற்றம் என தகவல் !

செல்போன் எண்ணை பிளாக் செய்வது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போனது, சட்டவிரோத கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கனிம வள கடத்தல் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனை செய்யாமல் அனுப்ப உத்தரவிட்டது, உயர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது ஆகிய சாதனைகளைப் படைத்த அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராக வலம் வந்த அழகு மீனா மாற்றம் ??

விவசாயிகளை மதிக்காமல் செயல்பட்டது, நெல் கொள்முதல் செய்வதில் தோற்றது, நெல் மணிகள் மழை நீரில் நனைந்து தற்போது வரை சீரழிந்து வருவதும் இவரது அதிகார ஆணவத்தின் சாதனையின் மைல்கல் !

தமிழகத்திலேயே தேர்தல் வாக்குப்பதிவில் குறைந்த வாக்கு பதிவை குமரியில் அரங்கேற்றியது அதற்கு செலவிடப்பட்ட தொகையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது, போன்ற அவலங்களுக்கு முக்கிய காரணமான ஆட்சியர் அழகு மீனா மாற்றம் !

சுகாதாரத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டார் !?

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் நேரடி ஐஏஎஸ் அதிகாரி அல்லாத பதவி உயர்வில் வந்த அழகுமீனா ஆட்சியராக சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். குமரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் அதிகார ஆணவத்தோடு செயல்பட்டு வந்தார். ஏற்கனவே தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது உறுப்பினர்களின் கேள்விகளால் கண்ணீர் வடித்த காட்சிகளும் அப்போது வெளியானது. அதன் பின்னர் பணியிடமாற்றமாக குமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விவசாயிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவமதித்து செயல்பட்டு வந்தார். விவசாய சங்கங்களின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குமரி மாவட்டம் வந்தபோது சந்திக்க அனுமதி கேட்ட நிலையில் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு இருந்தார். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கூட நடத்துவதில் பெரும் அவமதிப்போடு தான் செயல்பட்டு வந்தார். இதனால் ஆட்சியருக்கு எதிராக விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூட ஏற்கனவே வாங்கப்பட்ட மனுக்களின் பதில்கள் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

காலை 10:30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 12 மணி அளவில் முடித்துவிட்டு கிளம்பி சென்றார். அதுவே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் தலைவராக கலந்து கொண்ட கடைசி கூட்டமாக மாறியது என்பது தான் தற்போதைய வரலாறாக மாறி உள்ளது. மேலும் இந்த கடைசி கூட்டத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் நெல் கொள்முதல் சம்பவத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் இருக்க ஆட்சியர் இருதலை வேடம் அணிந்து நாடகம் நடத்தியதால் விவசாயிகள் டிராக்டரில் அறுவடை செய்த நெல்லை எடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து போராட்டம் நடத்திய செயல்களும் அரங்கேறியது.

மனு வாங்குவது போல் நடிப்பதும் அதற்கு தீர்வு என்பது கானல் நீரான கதையும் தான் இவரது செயல்பாடாக இருந்தது. இதனால் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் மனு கொடுத்தவர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தியதும் பலமுறை கொடுத்த மனுக்களை கழுத்தில் மாலையாக அணிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பயணமாக சென்றதும் பேசு பொருளானது.

விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய வரலாறும் இவரது ஆட்சி காலத்தில் நடந்தது.

குமரி மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகள் மற்றும் சாலை பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை அகற்றுவதில் மிகுந்த மெத்தனத்தை கடைபிடித்து வந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் செயல்பட்டு வந்தார். இதனால் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து குமரி மாவட்டத்தின் மானத்தைக் கப்பலேற்ற செய்தார்.

மேலும் முக்கிய அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளரைப் போலவே செயல்பட்டு கனிமவள கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக சுமார் 86 கனிமவள வாகனங்களின் பதிவு எண்களைக் குறிப்பிட்டு தனி உத்தரவு பிறப்பித்து அந்த வாகனங்களை 24 மணி நேரமும் எந்த சோதனையும் செய்யாமல் அனுப்ப உத்தரவிட்டு அதிர்ச்சி அளித்தார். அது குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியானது.

மேலும் கல்குவாரிகள் மண் குவாரிகளுக்கு சட்டவிரோத அனுமதி கொடுப்பது இவருடைய ஆட்சி காலத்தில் அதிகம் நடந்தேறிய அவலமும் நடந்தது. அதேபோல கிரஷர்களுக்கு அனுமதி கொடுப்பதிலும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிகமாக கூறப்பட்டு வந்தது.

குமரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற பின்னர் இதுவரையும் எந்த கல் குவாரிகளிலும் இவர் ஆய்வு செய்தது கிடையாது. கல்குவாரிகளில் சட்ட விரோதமாக அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் விதி மீறல்கள் நடந்தும் கண்டு கொள்ளாமல் அந்த கல்குவாரிகளை குறைந்தபட்சம் ஆய்வு செய்யாமல் சட்டவிரோத கல்குவாரி அதிபர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார்.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூடப்பட்ட கல்குவாரிகளை தற்போது மூடியதாக ஏமாற்றி இயற்கை வளங்கள் துறை அமைச்சருக்கு “அல்வா” கொடுத்த வரலாறும் குமரி மாவட்டத்தில் நடந்தது.

ஆட்சியர் அலுவலகத்தில்
கனிம வள கடத்தலை அனுமதிக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்த முன்னாள் அமைச்சரான சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக சந்திக்க அனுமதி கொடுக்கும் மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் அல்லது விவசாயிகளின் பிரதிநிதிகளை விவசாய சங்க தலைவர்களை சந்திக்க அனுமதி கொடுக்காதது தான் ஏன் என்பது புரியவில்லை.

அரசு வழங்கிய செல்போன் whatsapp பிளாக் செய்து வைப்பது இவரது கைவந்த கலை.

இவர் விரைவில் மாற்றப்பட வேண்டும் குமரி மாவட்டத்திற்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று நினைத்த மக்களுக்கு உண்மையிலேயே இவரது மாற்றத்தின் மூலம் விடிவுகாலம் பிறந்ததாக கூறப்படுகிறது.

அதிகார ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவரது மாற்றம் பல்வேறு தரப்பினரையும் கொண்டாடும் விதத்திலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது என்றால் மிகையல்ல.

இவரின் பணியிட மாற்றத்தால் கன்னியாகுமரி பொதுமக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பணியிட மாற்றமாகியுள்ள பணிகளையாவது இவருடைய கடமையை செவ்வனே செய்து சிறப்பு பெற வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Customize Text: Font Color:
ias alakumeena transfer
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம்!!?
next post
இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர் ஜெனரல் ரேச்சல் தாமஸ் பொறுப்பேற்பு .

You may also like

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

June 20, 2026

போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !...

June 16, 2026

குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு...

June 16, 2026

குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்...

June 16, 2026

ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்...

June 14, 2026

குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா...

June 8, 2026

90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட...

June 8, 2026

ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !...

June 8, 2026

குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்....

June 6, 2026

குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்...

June 6, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!?

    June 20, 2026
  • விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!?

    June 20, 2026
  • நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !!

    June 20, 2026
  • பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

    June 20, 2026
  • சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

    June 20, 2026

Categories

  • chennai (13)
  • dintigul (12)
  • erode (1)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (28)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ranipettai (1)
  • sivagangai (2)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • tuticorin (4)
  • Uncategorized (6)
  • world (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்...
விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார்...
நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision