கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர் மீது வழக்குப் பதிவு !!? by ஆசிரியர் August 8, 2026 written by ஆசிரியர் August 8, 2026 0 comments 32 Reading Mode கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடமிருந்து 21 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் ராஜா, சதீஷ், திருக்கோவிலுார் சத்தியநாராயணன், ரமேஷ், தினகரன் ஆகியோர் தனியார் ஏஜென்சி நடத்தி வந்தனர். இந்த ஏஜென்சியில், வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம் 60 மாதங்கள் செலுத்தினால் வீட்டுமனை தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை நம்பி, பெரியசிறுவத்துார் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன், (வயது 57) கடந்த 2012 – ஆம் ஆண்டு வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் சேர்ந்தார். இந்த திட்டத்தில் மேலும் 50 பேர் சேர்ந்து மாத தவணை செலுத்தினர். கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் 2016 – ஆம் ஆண்டு வரை 21 லட்சத்து 26 ஆயிரத்து 350 ரூபாய் பெற்ற நிலையில், இத்திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு மனையோ அல்லது பணத்தையோ திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ராஜா, சதீஷ், சத்தியநாராயணன், ரமேஷ், தினகரன் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ராஜபாளையம் பட்டாலியன் போலீசில் லஞ்சப் புகார் எதிரொலி ! எஸ்ஐ உள்ளிட்ட இரண்டு பேர் சஸ்பெண்ட் !!? next post இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!? You may also like கள்ளக்குறிச்சி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.