கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை !!? by ஆசிரியர் August 16, 2026 written by ஆசிரியர் August 16, 2026 0 comments 6 Reading Mode கள்ளக்குறிச்சி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை !!? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் போலீசாரை நியமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் மற்றும் அவசர காலங்களில் துரிதமாக உதவும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற பிரிவை முதல்வர் விஜய் கடந்த ஜூன் மாதம் துவக்கினார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தில், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 பெண் போலீசார், 2 டிரைவர்கள் என 8 பேர் பணியமர்த்தப்பட்டனர். இக்குழுவினர் இரண்டாக பிரிந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். மாவட்டம் முழுதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண்களுக்கு எதிராக குற்றம் நடைபெறும் போது உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லுதல், ரகசிய தகவலின் பேரில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துதல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுதும் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளதால் பெண் போலீசார் சிரமமடைகின்றனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் பெண் போலீசாரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் !!? next post செந்தில் வேலன் ஐபிஎஸ் சர்ச்சைக்குரிய பின்னணிகள் ! அதிகார மட்டத்தின் நிழல் நிஜங்கள் !! ஒர் புலனாய்வு !!? You may also like கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர்... August 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.