chennai தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? by ஆசிரியர் June 3, 2026 written by ஆசிரியர் June 3, 2026 0 comments 9 Reading Mode தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !! தமிழக காவல்துறையில் உயர்மட்ட அளவில் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ் அவர்களை நியமித்திருந்தது. சந்தீப் ராய் ரத்தூர் தற்போது தமிழக அரசு மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ் அவர்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் காவல்துறைத் தலைவராக (HOPF) நியமித்துள்ளது. அவர் விரைவில் பதவியேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய டிஜிபியாக பணியாற்றி வரும் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ், சென்னை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் காவல்துறை தலைமை இயக்குநராக (Director General of Prisons and Correctional Services) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த கே. சங்கர், ஐபிஎஸ், சென்னை அமலாக்கப் பிரிவு சிஐடி (Enforcement Bureau CID) கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்க உள்ள நிலையில், தமிழக காவல்துறையின் உயர்மட்ட நிர்வாகத்தில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசின் உள்துறைத் துறை அறிவித்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default ips transfer Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி போலிஸாரின் போதை பொருளுக்கு எதிரான வேட்டை !? சிக்கிய 44 பேர் கைது!!? next post ஆதரவற்ற மூதாட்டிக்கு நல்வாழ்வை ஏற்படுத்திய ஸ்டாலின் ஐபிஎஸ். நிமிர் குழு !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.