kanyakumari குமரி போலிஸாரின் போதை பொருளுக்கு எதிரான வேட்டை !? சிக்கிய 44 பேர் கைது!!? by ஆசிரியர் June 3, 2026 written by ஆசிரியர் June 3, 2026 0 comments 10 Reading Mode குமரி போலிஸாரின் போதை பொருளுக்கு எதிரான வேட்டை !? சிக்கிய 44 பேர் கைது!!? போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை இரண்டு வாரங்களில் 44 பேர் கைது; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகளின் தீவிர வேட்டை தொடர்கிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின், IPS உத்தரவின்பேரில் கடந்த மே 13ஆம் தேதி ஐந்து சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைநோக்கு பார்வை, துல்லியமான திட்டமிடல் மற்றும் உறுதியான தலைமையின் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் தனிப்படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய 27 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல், 17 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 253 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்குவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின்,இகாப. அவர்களின் முக்கிய இலக்காகும். போதைப் பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்து உள்ளார். போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்க காவல்துறை மிகுந்த உறுதியுடன் அதிதீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இந்திய ராணுவ செவிலியர் சேவையின் கூடுதல் தலைமை இயக்குநராக மேஜர் ஜெனரல் ரேச்சல் தாமஸ் பொறுப்பேற்பு . next post தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? You may also like குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு... July 7, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக... June 25, 2026 குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை... June 24, 2026 சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.