சென்னை போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!? by ஆசிரியர் July 28, 2026 written by ஆசிரியர் July 28, 2026 0 comments 14 Reading Mode பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!? சென்னை வேளச்சேரியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் மது போதையில் இருந்த ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சில்மிஷம் செய்ததாக புகார்.ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றும் மணிமாறன் ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.அன்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது மைத்துனருடன் சென்று மது அருந்திவிட்டு மைத்துனர் பைக் ஓட்ட மணிமாறன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் என கூறப்படுகிறது. அப்போது வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் பின்னால் தட்டியதாக அந்த பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் கணவருடன் சேர்ந்து சென்று புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளருக்குச் சிறை. நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. போலீஸ் விஷன் பகுப்பாய்வு! காவல்துறையின் தாரக மந்திரமே, கடமை,கண்ணியம், கட்டுப்பாடோடு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே ஆகும். இவைகளை காற்றில் பறக்க விட்டு, தன் கணவரோடு வந்த பெண்ணையே சீண்டிப் பார்க்கும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தனிமையில் வரும் பெண்களிடம் இவர் எந்த நிலையில் நடந்து கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது !? தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து காவல் துறைக்கு முழு கம்பீரம் கிடைத்துள்ளது என்பது அறுதியிட்ட உண்மையாகும். முதல்வர் விஜய் ஆட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கடமை தவறாது சீறிவரும் சிங்கம் போல் வீர நடை போட்டு வரும் காவலர்கள் மத்தியில், போதையில் மயங்கி மதி கெட்டு ஒழுங்கீன செயல்களைச் செய்த மணிமாறன் போன்றவர்களுக்கு பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. நிரந்தர பணிநீக்கம் செய்து சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுவதே சரியானதாக இருக்கும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். இவர்களைப் போன்ற ஒரு சில காவலர்களால் தான், தன் கடமையை கண்ணும் கருத்துமாக சட்ட, ஒழுங்கின்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் கண்ணியமிக்க காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களிடையே நன்மதிப்பு கிடைக்காத நிலையே உள்ளது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே அமைந்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!? next post நண்பனை கொன்று வீடியோ வெளியிட்ட நண்பர்கள் ! இருவர் தலைமறைவு !!? You may also like வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று... September 21, 2026 எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி... September 21, 2026 ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும்... September 21, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற... September 17, 2026 ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள்... September 15, 2026 உயர் நீதிமன்றம் அதிரடி ! காவல் நிலைய சிசிடிவி பதிவுகள்... September 7, 2026 தொழில் அதிபர் வீரமணி போக்சோ வழக்கு ! அருண் ஐபிஎஸ்... September 1, 2026 தவெக விஜய் அரசின் நிர்வாக அதிரடி ! தமிழக காவல்துறையில்... September 1, 2026 அருண் ஐபிஎஸ் – சவுக்கு சங்கர் மீது ரூபாய் 01... August 21, 2026 லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி... August 20, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.