கன்னியாகுமரி இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!? by ஆசிரியர் August 8, 2026 written by ஆசிரியர் August 8, 2026 0 comments 13 Reading Mode இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் “நிமிர்” குழுவினர் கல்வியை விட்டு விலகும் நிலையில் இருந்த இரண்டு சிறுமிகளும், மறவன்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் முறையே 6 மற்றும் 4ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை என்ற தகவல் நிமிர் குழுவினருக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிமிர் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிகளின் தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்ததும், தாயார் மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததுடன், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும், குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல், தாயாரின் அறிவுரைகளையும் பின்பற்றாத நிலை இருப்பதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, குழந்தைகளுக்கும் அவர்களது தாயாருக்கும் நிமிர் குழுவினர் உரிய ஆலோசனைகள் மற்றும் மன உறுதியை வழங்கினர். பின்னர், லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, இரு சிறுமிகளுக்கும் தரமான கல்வி தொடர்வதற்கான வாய்ப்பும், பாதுகாப்பான விடுதி வசதியும் ஏற்பாடு செய்து, அவர்களை பள்ளியில் சேர்த்து வைத்தனர். இதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குழந்தைகளின் கல்வியை தொடர்வதற்கு காவல் கண்காணிப்பாளர் உயர்திரு மருத்துவர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் உருவாக்கியுள்ள நிமிர் குழுவினர் மூலமாக தொடர்ந்து சாதனைகளைப் படைத்து பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர் மீது வழக்குப் பதிவு !!? next post துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.