இராமநாதபுரம் ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி !! 500 கோடி சுருட்டல்!!? by ஆசிரியர் August 9, 2026 written by ஆசிரியர் August 9, 2026 0 comments 15 Reading Mode இராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி !! 500 கோடி சுருட்டல் !!? ஆசைக்கு இடம் கொடுத்து உங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து விடாதீர்கள்! டிஜிட்டல் பொறி , 500 கோடி ரூபாய் மோசடியும் வாடகை வங்கி கணக்குகளும் : ராமநாதபுரம் மாவட்டதிலிருந்து தேசத்தை சிதைக்கும் கூட்டு மோசடி பயங்கரம்தமிழகத்தை உலுக்கிய 500 கோடி ரூபாய் சைபர் மோசடி: 205 பேர் ஒரே நாளில் கைது! தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டை, மாநிலத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு மாபெரும் நிழல் உலகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான நிதி, டிஜிட்டல் மோசடிகள் மூலம் சுருட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய துல்லியமான நடவடிக்கையில், மாநிலம் முழுவதும் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், கைதானவர்களில் 16 பேர் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் கல்லூரி மாணவர்கள். இந்த 205 நபர்களிடம் இருந்து மட்டும் 310 வங்கி கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 350 வங்கி கணக்குகளைக் கொண்டு இந்த 500 கோடி ரூபாய் மோசடி சங்கிலி பின்னப்பட்டுள்ளது. இது வெறும் தொடக்கமே தவிர, இதன் பின்னால் இருக்கும் ‘திமிங்கிலங்களை’ பிடிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது இது பெரும் சவாலாகவே உள்ளது. மோசடி கும்பலின் செயல்பாட்டு முறை (Modus Operandi): எப்படி அரங்கேறியது இந்த வலை? இந்த மர்ம கும்பல் பொதுமக்களின் பணத்தைத் திருட நான்கு முக்கிய உத்திகளைக் கையாண்டுள்ளது. அவை தொழில்நுட்ப ரீதியாக எளிமையானவை என்றாலும், உளவியல் ரீதியாக மக்களைக் கட்டிப்போடுபவை: டிஜிட்டல் அரஸ்ட் (Digital Arrest): சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் போலப் பேசி, “நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று மிரட்டி, சட்ட ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்கப் பணம் கேட்டுப் மிரட்டுவது. ஆன்லைன் கேமிங் (Online Gaming): சிறு முதலீட்டில் பெரும் லாபம் ஈட்டலாம் என்ற போதையை இளைஞர்களிடம் விதைத்து, அவர்களைப் பெரும் தொகையை இழக்கச் செய்வது. லிங்க் டச் (Link Touch): கவர்ச்சிகரமான செய்திகள் அல்லது வங்கிப் புதுப்பிப்பு என்ற பெயரில் அனுப்பப்படும் ‘மர்ம லிங்குகளை’ கிளிக் செய்ய வைத்து, மொபைல் போன்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. ஆன்லைன் ஏமாற்று வேலைகள் (Online Cheating): போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் ‘லக்கி வின்’ விளம்பரங்கள் மூலம் ஆசை காட்டிப் பணம் பறிப்பது. இந்த மோசடி கும்பலின் அதிநவீன தொழில்நுட்பத் திறன் எங்கே வெளிப்படுகிறது என்றால், ஒருவரிடம் திருடப்படும் பணம் நேரடியாக மோசடி செய்பவர்களின் கணக்கிற்குச் செல்வதில்லை. புலனாய்வு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவ, அந்தப் பணம் 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அடுக்கடுக்காக மாற்றப்பட்டு (Layering), இறுதியில் மர்ம கும்பலின் கைக்குச் செல்கிறது. இந்தச் சிக்கலான பணப் பரிமாற்றப் பாதைதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பெரும் தடையாக உள்ளது. வெறும் கமிஷனுக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட ‘ஸ்லீப்பர் செல்கள்’ இந்த மாபெரும் மோசடி சங்கிலியின் மிக முக்கியமான கண்ணிகள் ‘வாடகை வங்கி கணக்கு’ வைத்திருப்பவர்கள். இவர்களைத் தான் புலனாய்வுத் துறையினர் ‘சைபர் மியூல்’ (Cyber Mule) அல்லது ‘சீட்டிங் ஸ்லீப்பர் செல்கள்’ என்று அழைக்கின்றனர். இவர்கள் சமூகத்தில் சாதாரண மாணவர்கள், தொழிலாளர்கள் அல்லது வேலையில்லாத இளைஞர்களாக வலம் வருவார்கள். தங்கள் வங்கி கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்த அனுமதித்து, அதுவரை ‘செயலற்ற நிலையில்’ (Dormant) இருப்பார்கள். ஒரு மோசடி அரங்கேறும்போது, இவர்களது கணக்குகள் திடீரென ‘ஆக்டிவேட்’ செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வந்து செல்லும் ‘பரிமாற்ற மையங்களாக’ மாறும். கமிஷன் மற்றும் செயல்பாடுகள்: ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பரிமாற்றம் செய்ய 1,000 ரூபாய் வரை கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறு ஆசைக்கு அடிபணிந்து, 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்ற நபர்கள் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கைதான 205 பேரும் இத்தகைய ‘சிறு மீன்களே’. பாதிக்கப்பட்ட மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் பின்வரும் பகுதிகளில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன: கரூர், கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, திருவாரூர், திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், கோவை, சேலம், சென்னை மற்றும் திருவொற்றியூர். ராமநாதபுரம் மாவட்டம்: டிஜிட்டல் மோசடி நெட்வொர்க்கின் முக்கிய மையம்? இந்த மோசடி விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பங்கு குறித்து எழுந்துள்ள புகார்கள் மாநிலத்தின் நிதிப் பாதுகாப்பிற்கே (State’s Financial Security) விடுக்கப்பட்ட சவாலாகத் தெரிகிறது. ‘போலீஸ் விஷன் நெட்வொர்க் முன்வைக்கும் ஆய்வின்படி, ராமநாதபுரத்தில் ஒரு ‘டிஜிட்டல் மோசடி பேரரசு’ தழைத்தோங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரு சாதாரணக் குற்றம் என்பதைத் தாண்டி, ஒரு ‘போலீஸ் – மற்றும் குற்றவாளி’ இடையேயான ரகசியக் கூட்டணியோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. லஞ்சம் கொடுப்பவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், லஞ்சம் தர மறுப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாகவும் எழுந்துள்ள புகார்கள், கண்காணிப்பு அமைப்புகளின் முழுமையான தோல்வியையே பறைசாற்றுகின்றன. மாநிலக் காவல் துறை இந்த மாவட்டத்தின் மீது ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வாடகை வங்கி கணக்கு மோசடிகளின் ஆணிவேரைக் கண்டறியாவிட்டால், சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை முற்றிலுமாகச் சிதைந்துவிடும். கண்ணீரில் பெற்றோர்கள்: ‘எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகிறதே!’ என்ற குமுறல் சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம் பெற்றோர்களின் கண்ணீராலும் ஆவேசக் குரல்களாலும் நிறைந்து காணப்பட்டது. 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கத் தாய்மார்களின் குமுறல் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்குவதாக இருந்தது. “என் பையன் திருடல, கொள்ளை அடிக்கல; ஏதோ கேம் ஆடுனான்னு சொல்றாங்க. 6 லட்சம் பீஸ் கட்டி படிக்க வைக்கிறேன், இப்போ அவன் வாழ்க்கை போயிருச்சுன்னா கவர்மெண்ட் பதில் சொல்லுமா?என்று கதறினார் ஒரு தாய். தம்பி என்ன செய்தான் என்றே தெரியாமல் கைக்குழந்தையுடன் சாலையோரம் தவித்து நின்ற உறவினர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. வெறும் 500 அல்லது 1000 ரூபாய் கமிஷனுக்காகவும், ஆன்லைன் விளையாட்டுகளுக்காகவும் தங்கள் பிள்ளைகள் ‘பச்ச மண்ணு’ போலச் சிக்கிக்கொண்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. “நாங்க ஓட்டுப் போட்டுக் கஞ்சி குடிச்சு வாழ்றவங்க சார், எங்க பிள்ளைய இப்படிப் புடிச்சிட்டு வந்துட்டாங்களே” என்ற அவர்களின் ஆதங்கம், சைபர் விழிப்புணர்வு இன்னும் அடித்தட்டு மக்களைசென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக காவல்துறையின் எச்சரிக்கை மற்றும் தீர்வு பொதுமக்களே, உங்கள் ஒரு சிறிய கவனக்குறைவு உங்களை ஒரு பயங்கரவாதக் கும்பலின் அல்லது நிதி மோசடிக் கும்பலின் கூட்டாளியாக மாற்றிவிடும். இதோ உங்களுக்கான சில இறுக்கமான எச்சரிக்கைகள்: வங்கி கணக்கை விற்காதீர்கள்: ‘Work from home’ அல்லது ‘சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரங்களை நம்பி உங்கள் வங்கி கணக்கு விவரங்களையோ, ஏடிஎம் கார்டையோ, கடவுச்சொல்லையோ யாருக்கும் தரக்கூடாது. கமிஷன் என்பது ஒரு பொறி: பிறரின் பணத்தை உங்கள் கணக்கில் பெற்று, அதை வேறு ஒருவருக்கு மாற்றுவது (Money Laundering) தண்டனைக்குரிய பெருங்குற்றம். இதில் 1,000 ரூபாய் கமிஷன் என்பது உங்களைச் சிறைக்கு அனுப்பும் தூண்டில் புழு. மூன்றாம் நபர் செயலிகள்: இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக வரும் ‘பெரிய லாபம்’ தரும் எந்த ஒரு செயலையையும் செய்யாதீர்கள். இந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் சைபர் மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் (Masterminds) இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ மட்டுமே: காவல்துறையினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 205 பேரும், வெறும் கமிஷன் பணத்திற்காகத் தங்கள் வங்கி கணக்குகளை மோசடி கும்பலிடம் வாடகைக்குக் கொடுத்த கணக்குதாரர்கள் மட்டுமே ஆவர். இவர்கள் இந்த மாபெரும் நெட்வொர்க்கில் வெறும் கருவிகளாகவும், ‘சீட்டிங் ஸ்லீப்பர் செல்களாகவும்’ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். தப்பித்துக் கொண்ட மர்ம கும்பல்: மக்களின் பணத்தை ஆன்லைன் மூலம் கொள்ளையடித்து, இந்த வாடகை வங்கி கணக்குகள் மூலம் பல கட்டங்களாக மாற்றி, இறுதியாக தங்களது கணக்குகளுக்குக் கொண்டு சேர்த்த உண்மையான ‘மர்ம மோசடி கும்பல்’ (சூத்திரதாரிகள்) இன்னும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்தே உள்ளது. போலீஸ் உடந்தையும் விசாரணை முடக்கமும்: ராமநாதபுரத்தில் பரவியுள்ள இந்த மோசடி வலையமைப்பில் சில உள்ளூர் போலீஸ் அதிகாரிகளே நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களை விடுவிப்பதாகவும், லஞ்சம் தர மறுப்பவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் கூறப்படுவதால், உண்மையான சூத்திரதாரிகளை நோக்கிய விசாரணைகள் தடைபட்டுள்ளன. சுயாதீன விசாரணைக்கான கோரிக்கை: சாதாரண எளிய மனிதர்களையும் மாணவர்களையும் மட்டுமே போலீசார் கைது செய்வதால், இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ED (அமலாக்கத்துறை) அல்லது CBI போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் நேர்மையான சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் விஷன் மீடியா நெட்வொர்க் வலியுறுத்துகிறது. அப்போதே இதன் பின்னணியில் உள்ள உண்மையான மாஸ்டர்மைண்டுகளைக் கண்டறிய முடியும். நினைவில் கொள்க: கைதான 205 பேரும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான். ஆசைக்கு இடம் கொடுத்து உங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துவிடாதீர்கள்! Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் !!? next post புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது! You may also like காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்... August 29, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு... August 16, 2026 ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ... August 9, 2026 துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர்... August 8, 2026 இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.