திருநெல்வேலி வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது ! 10 லட்சம் ரொக்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் !!? by ஆசிரியர் August 25, 2026 written by ஆசிரியர் August 25, 2026 0 comments 6 Reading Mode வாகன சோதனையில் சிக்கிய சிறைவார்டன் தமிழரசன் கைது ! 10 லட்சம் ரொக்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் !!? 2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல் – நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவில் தனிப்படை அதிரடி! சிறை வார்டன் கஞ்சா கடத்தியது எப்படி? தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த தமிழரசன் (வயது 31) மற்றும் அவரது நண்பர் நவீன் (வயது 25) ஆகியோர், நெல்லையில் சொகுசு காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் சோதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படையினர் கடந்த 10 நாட்களாக ரகசிய தகவல்களை சேகரித்து வந்தனர். கஞ்சா விற்பனை கும்பல் நெல்லை மாநகர பகுதிக்குள் காரில் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நெல்லை டவுன் குற்றாலம் சாலையில் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட். காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழரசன் (வயது 31), முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த வீரபாகு மகன் நவீன் (வயது 25) என்பதும், அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. கைது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை இதனையடுத்து நெல்லை நகர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சொகுசு கார், 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டை ! சிக்கிய நீர்வளத் துறை அதிகாரிகள் !! இருவர் கைது !!? next post மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!? You may also like மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி... August 21, 2026 பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான... August 20, 2026 மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க... August 12, 2026 மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.