திருநெல்வேலி மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , உடல் நலக்குறைவால் விடைபெற்றது ! by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 14 Reading Mode மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் உடல் நலக்குறைவால் விடைபெற்றது ! திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த “சீஸர்” (Caesar) என்ற மோப்ப நாய், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. நீண்ட காலமாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி வந்த சீஸர், பல்வேறு குற்றவியல் விசாரணைகள், தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட முக்கிய காவல் பணிகளில் திறம்பட செயல்பட்டு காவல்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சீஸர் உயிரிழந்தது, காவல்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறை மரபின்படி, 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சீஸருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், காவல் அமலாக்கப் பிரிவு (PEW) துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரன்,மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, சீஸரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை நினைவு கூர்ந்தனர். சீஸரின் சீரிய பணியைப் பாராட்டியும், அதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் போலீஸ் விஷன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் மரணம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா ! வாலிபர் கைது !!? next post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை !? You may also like மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு... August 25, 2026 வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி... August 21, 2026 பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான... August 20, 2026 மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க... August 12, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.