தஞ்சாவூர் காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!? by ஆசிரியர் September 4, 2026 written by ஆசிரியர் September 4, 2026 0 comments 8 Reading Mode காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!? வருகின்ற 06.09.2026 அன்று காவலர் தினத்தை முன்னிட்டு,தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., ஆகியோர், இதர காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து, காவல் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு காவல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப.,அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மாதிரி காவல் நிலையம், மோப்ப நாய்படைப்பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், போக்குவரத்து காவல்துறை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம்பெற்றிருந்தன. மேலும் மோப்ப நாய் படைப்பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் சிறப்பு செயல்விளக்க (DEMO) நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காவல்துறையின் பணிகள், பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு காவல்துறை பிரிவுகளின் செயல்பாடுகளை பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்வையிட்டு கண்டு களித்தனர். அதனைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியம், அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அனைவரின் பங்களிப்பு குறித்து மாணவிகளுக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப.,ஆகியோர் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். காவல்துறையின் சேவையை பொதுமக்களும், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களும் நேரடியாக அறிந்து கொள்ளவும், காவல்துறையினரின் பணிகள் மற்றும் பொறுப்புகளை புரிந்து கொள்ளவும் இச்சிறப்பு காவல் கண்காட்சி ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு !!? next post சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் ! செய்தியாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை !!? You may also like காவலர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ரோஷம் வரும் ! காவலர்களை... August 19, 2026 கபிஸ்தலம் காவல் நிலையத்தில் , காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்... August 12, 2026 தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில்... July 26, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.