சிவகங்கை வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை !! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!? by ஆசிரியர் September 17, 2026 written by ஆசிரியர் September 17, 2026 0 comments 6 Reading Mode வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை !! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!? சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வட்டாயுதம் என்பவரது மனைவி அன்னமயில் (வயது62) என்பவர், கடந்த (07.08.2018) அன்று மாலை சுமார் 6.00 மணியளவில், சாலைக்கிராமம் சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு தெற்கு சமுத்திரம் கண்மாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த இருவர் வழி கேட்பது போல் நடித்து, அன்னமயில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அன்னமயில் அளித்த புகாரின் பேரில், சாலைக்கிராமம் காவல் நிலைய குற்ற எண்.62/2018 U/s 392 IPC-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், பரமக்குடியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 45), சென்னையைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 30) மற்றும் தினேஷ்குமார் (வயது 31) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இளையான்குடி குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000- அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேற்கண்ட குற்றவாளிகள் மீது சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர், காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர் !! அசோக் சக்ரா விருது !!மத்திய அரசு கௌரவிப்பு !!? next post குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற வீடியோ !? வெளியிட்ட சவுக்கு சங்கரை வன்மையாக கண்டிக்கிறோம் !!? You may also like சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !... September 4, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.