kanyakumari கனிமவள வாகனங்கள் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு செல்ல தடை விதித்த விவகாரம் ! என்ன ஆனது !!? by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 4 Reading Mode கனிம வள வாகனங்கள் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு செல்ல தடை விதித்த விவகாரம் !!?? தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க மத்திய அரசுதான் உத்தரவிட அதிகாரம். மாநில அரசுக்கு இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவு மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரி – களியக்காவிளை மாநில நெடுஞ்சாலையாக மாறியதால் மாவட்ட ஆட்சியரின் 10-04-2026 தேதிய உத்தரவு செல்லுபடியாகும் நிலை குமரியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டில் இல்லாததால் தற்போது பணி நடந்துவரும் நான்கு வழி சாலை மட்டுமே உள்ளதால் கனிம வள வாகனங்கள் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் நிலை. கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கனிமவள கடத்தல் நடந்து வந்தது. இதனால் தொடர் விபத்துகளும் நடந்து உயிர் பலிகள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 முதல் 9ஆம் தேதி வரை மட்டுமே மாவட்டத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட உயிர் பலிகள் கனிம வள வாகனங்களால் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் நிலையும் ஏற்பட்டது. மேலும் மத்திய அரசின் நகாய் நிறுவனம் கன்னியாகுமரி முதல் கேரளா எல்லை பகுதியான காரோடு வரை நான்கு வழி சாலை பணிகள் செய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் தற்போது உள்ள மாநில நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி முதல் கொச்சின் வழியான தேசிய நெடுஞ்சாலையில் (NH 47 ) கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையான தேசிய நெடுஞ்சாலையை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அது மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலை துறையினரின் பராமரிப்பில் இருந்து வருவதும் மாநில அரசு அழகிய மண்டபம் உட்பட பல்வேறு இடங்களில் பராமரிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் செய்தும் வருகிறது. மேலும் சில இடங்களில் பெருமளவு ஆக்கிரமிப்புகளும் ஒரு சில இடங்களில் நான்கு வழி சாலை பணிகளுக்கான பாலப் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் போக்குவரத்து நெருக்கடிகளால் தொடர் விபத்துகளும் கனிம வள வாகனங்களால் மட்டுமே பெரும்பாலும் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ், அவர்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி யின் பரிந்துரையின் பேரில் சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டும் பொதுமக்களின் உயிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து வந்ததால் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு வழி சாலையில் பணிகள் முடியும் வரை கனிமவள வாகனங்கள் குமரி மாவட்டத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் கனிமவள வாகனங்களின் உரிமையாளர்கள் மௌனம் காத்து வந்தனர். மே மாதம் முழுவதும் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தற்போது விடுமுறை கால நீதிமன்றத்தில் கனிமவள வாகனங்கள் இயக்கும் லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய நெடுஞ்சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடர்பான விதிகளை மத்திய அரசு மட்டுமே வகுக்க வேண்டும் என்றும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 47 மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் தற்போதைய உயர் நீதிமன்ற உத்தரவில் மாவட்ட ஆட்சியரின் 10-04-2026 தேதிய உத்தரவு தப்பியதாக சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போதைய உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் மட்டுமே மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எங்குமே பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அமைக்கப்படும் நான்கு வழி சாலை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது கன்னியாகுமரி களியக்காவிளை நெடுஞ்சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தை தன் இரு கண்கள் போல் காத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர். ஸ்டாலின் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default ias. vs ips Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? next post டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் நிமிர்குழு ., செய்த செயல் என்னவென்று தெரியுமா !?? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.