kanyakumari எஸ்.ஐ இசக்கி ராஜாவை கைது செய்யக்கோரி போராட்டம் ! தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!!? by ஆசிரியர் May 13, 2026 written by ஆசிரியர் May 13, 2026 0 comments 8 Reading Mode எஸ்.ஐ- இசக்கி ராஜாவை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி !? ஆலங்குளத்தில் காவல் துறையினரால் சுடப்பட்ட மணிகண்டனின் மனைவி, நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில், கடந்த 07.04.2026 அன்று உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவரால் மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டனின் மனைவி பொன்மணி கூறியதாவது: “எனது கணவரைச் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்குத் தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுவரை எங்களுக்கு எந்தவித நீதியோ, உதவியோ கிடைக்கவில்லை. எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மே 26-ஆம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன்,” என தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default si esakki raja Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் , போலீசாருக்கு ஸ்டாலின் ஐபிஎஸ் பாராட்டு !! next post உளவுப்பிரிவு ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் ! விஜயின் வியூகம்: எதிர்ப்பை மீறி நியமனம் செய்தது ஏன் ??? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.