chennai விஜய்யை பாதுகாக்கும் பொறுப்பில் டிஐஜி தர்மராஜன் – யார் இந்த ஐபிஎஸ்!? by ஆசிரியர் May 7, 2026 written by ஆசிரியர் May 7, 2026 0 comments 4 Reading Mode விஜய்யை பாதுகாக்கும் பொறுப்பில் டிஐஜி தர்மராஜன் – யார் இந்த ஐபிஎஸ்!? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரியாக டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி பார்ப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை விஜய் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இதற்கிடையேதான் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் விஜயை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் டிஐஜி தர்மராஜன் விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இவர் தான் தற்போது விஜய்யின் பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஆவார். விஜய்யின் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு கொடுப்பது தான் டிஐஜி தர்மராஜனின் பணியாகும்.தர்மராஜன் தற்போது வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரை சேர்ந்த இவர் மத்திய பணியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். இவர் சென்னையில் உளவுத்தறை இணை கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வேலூர் டிஐஜியாக இருக்கும் தர்மராஜன் வசம் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.விஜய்யின் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளை டிஐஜி தர்மராஜன் மேற்கொள்வார். இவரது உத்தரவின் பேரில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஒருவார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யின் ‘கான்வாய்’ உள்பட அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முன்னதாக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக இருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பொறுப்பை டிஐஜி திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default IPS dharmarajan Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு!? next post வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல் வனத்துறை??? You may also like விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? June 7, 2026 தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு !... June 4, 2026 தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? June 3, 2026 ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? May 17, 2026 தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... May 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.